08-05-2004, 09:22 PM
சந்திரிகாவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைப் பதவியைப்பெற அநுரா தீவிரம்
ஐ.ம.சு.முன்னணியின் கட்சித் தலைவியாக இருந்த சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து, அவரது சகோதரரும் உல்லாசத்துறை அமைச்சருமான அநுரா பண்டாரநாயக்க, கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கட்சி அங்கத்தவர்கள் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில், கூட்டுக் கட்சியின் தலைவராகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள அநுரா, கூட்டுக் கட்சிகளுக்கிடையில் சில கருத்து வேற்றுமைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டபோதும், அவற்றை தான் தலைவராக வந்தால், உடனடியாகச் சரிசெய்து விட தன்னால் முடியும் என்றும் சூளுரைத்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்துக்கூறிய, அரசாங்கப் பேச்சாளர் மங்கள சமரவீர, தங்களது கூட்டுக் கட்சிகளுக்கிடையில் எதுவித கருத்து வேற்றுமைகளும் இல்லை என்றும், அநுராவின் கூற்றைத் தான் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், கட்சியின் புதிய தலைவராக யார் வருவார் என்பது குறித்து கருத்தெதுவும் கூற அவர் மறுத்து விட்டார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>