08-05-2004, 09:21 PM
பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க கடற்படை அதிகாரி சிறீலங்காவிற்கு விஜயம்
பசுபிக் பிராந்தியத்தின் பல பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கக் கடற்படைகளிற்கும் போர்க்கப்பல்களிற்கும் பொறுப்பாகவுள்ள கடற்படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் வலஸ் சி.கிறெக்சன் தற்போது கொழும்பிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை, சிறீலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சாந்த கொட்டேகொடவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடாத்திய அமெரிக்க கடற்படை அதிகாரி, இன்றும் நாளையும் ஏனைய படையதிகாரிகளையும், குறிப்பாக கடற்படை அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதுடன், சில முக்கிய கடற்படைத் தளங்களுக்கும் விஜயம் மேற்கொள்வார் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக் கடற்படை அதிகாரியின் விஜயத்திற்கான காரணங்களெதையும் வெளியிட சிறீலங்கா இராஜாங்க அமைச்சும் வெளிநாட்டு அமைச்சும் மறுத்து விட்டன.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>