Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமாதானச் சுருள் திரை மாலை
#1
<span style='font-size:30pt;line-height:100%'><b> சமாதானச் சுருள் திரை மாலை </b></span>

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_tropy.2.jpg' border='0' alt='user posted image'>

யாழ்பாணத்தின் யுத்தகாலத்துக்கு பின்னர் உள்ள சூழலில் வாழும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வியலை ஊடறுத்துச் செல்லும் உண்மைகளை திரையில் செதுக்கியிருக்கும் அருமையான படைப்புகளே சமாதானச் சுருள் 7 குறும்படங்கள்...........

31.07.2004 சூடு தணியாத மாலைவேளையின் குறிக்கப்பட்ட நேரத்துக்குள் மண்டபத்துக்குள் நுழைய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சினிமா ஆர்வலர்கள் வந்து அமர்கிறார்கள்.

"இக்குறும்படங்களை 3வது தடைவையாக நான் பார்க்கப் போகிறேன்" என்கிறார் ஒரு நண்பர்.

"ஊரை விட்டு வெளியேறி வெகு காலமாகி விட்டது அந்த மண்ணைத் ஒரு முறை இப்படியாவது தரிசிக்க வேண்டும் என்ற ஆவல்" என்கிறார் மற்றொருவர்.

சுவிஸ் மக்களுக்கு இது புதியது.

"என்ன சொல்லியிருக்கிறார்கள்" என்று சுவிஸ் நாட்டவர் வினவுகிறார்.

"பார்த்து விட்டு சொல்லுங்களேன் உங்கள் கருத்தை.............." என்கிறேன்.

மௌனமாகிறார். யோசிக்கிறார்.

மாலை 8.00 மணிக்கு Europe Movi Club தலைவர் <b>மார்க்கஸ் பஸ்லர்</b> வந்திருப்போரை வரவேற்கிறார்.

யாழ் திட்ட இணைப்பாளரும்
அழுத்தம் குறும்பட இயக்குனருமான <b>கா.ஞானதாஸ் </b>
மற்றும்
போருக்குப் பின் இயக்குனர் <b>ஜெயரஞ்சனி ஞானதாஸ்</b> ஆகியோரை பார்வையாளருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அலட்டல் இல்லாமல் இரத்தினச் சுருக்கமாக இருக்கிறது அவரது அறிமுகம்.

பார்வையாளர்கள் கரகோசம் செய்கிறார்கள்.

திரு.திருமதி. ஞானதாஸ் இருவரும் அமைதியாக எழுந்து நிற்கிறார்கள்.

மீண்டும் கரகோசம்.

கரகோசத்தோடு சேர்த்து இருளை கவ்வத் தொடங்குகிறது மண்டபம்.

<b>திரையில்.............</b><span style='color:brown'>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_1_307.jpg' border='0' alt='user posted image'>
<b>அதிகாலையின் இருள்</b>
களத்தில் கிடந்த ரவைகளைக் கூட புல்லாங்குழலாக்கி
போரினால் ஏற்பட்ட ஊனத்தை மறந்து சமாதானத்துக்காக ஏங்கும் இளம் உள்ளங்கள்....................
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_9.jpg' border='0' alt='user posted image'>
<b>அழுத்தம்</b>
கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_3.jpg' border='0' alt='user posted image'>
<b>செருப்பு</b> காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்ட சிறுமிக்கு கண்ணி வெடியின் கோரம் அதை சாத்தியப்பட வைத்ததா?



ஓவ்வொரு படத்தின் இறுதியிலும் ஒரு சில நொடிகளின் அமைதிக்குப் பின் கரகோசம் வருகிறது...............

3 குறும்படங்களின் திரையிடலுக்குப் பின்னர் 30 நிமிட இடைவேளை விடப்படுகிறது.


செருப்பு குறும்படத்தில், நிலக் கண்ணி வெடியில் மாட்டிக் கொண்டு காலையிழக்கும் காட்சியில் அதிர்ந்த சுவிஸ் பெண்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள்.

குறும்படங்கள் முடிந்தவுடன் உள்ள கலகலப்பு இல்லாத ஒரு மயான அமைதி.
யாரும் யாரோடும் பேசாதிருக்கின்றனர்.

யுத்தம் நிறைந்து கிடந்த யாழ் மண்ணின் ஒரு பகுதிக்குள் சென்று வந்த உணர்வாகயிருக்கலாம்.

அங்கு நடக்கும் இன்னல்களில் ஒரு சில துளிகளே இவை.

என் நண்பர்கள் என்னைப் பார்ப்பதோடு சரி. என்னிடம் எதுவுமே கேட்பதாக இல்லை.

உணவகத்துக்கு சென்று 30 நிமிடங்களுக்குள் கொஞ்சம் சாப்பிடுகிறார்கள்.

மீண்டும் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள்.

அழுது கொண்டு வெளியேறியவர்களைக் காணவில்லை.

உணவகத்தை நடத்தும் நண்பரிடம் கேட்கிறேன்.

வேறு யாராவது வெளியில் இருக்கிறார்களா என்று.

\"இல்லை.
அந்த பெண்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை\"
என்று சொல்லி விட்டுச் சென்று விட்டனர் என்கிறார்.

காட்சிகள் மீண்டும் குறும்படங்களாக திரையில் விரிகின்றன...........


<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_4.jpg' border='0' alt='user posted image'>
<b>தடை</b>
மருந்துகளுக்கான தடையினால் ஏற்படும் விபரீதங்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_5.jpg' border='0' alt='user posted image'>
<b>மூக்குப் பேணி</b>
சுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள்,
மனிதனின் புலனுக்குப் புரியாமலே,
யுத்தத்தை உருவாக்கும் அபாயம்
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_6.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒளித்துப் பிடித்து</b>
127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணி...........

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_7.jpg' border='0' alt='user posted image'>
<b>போருக்குப் பின்</b>
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும் , ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.


திரையிடலின் முடிவில் அனைவரது கரகோசமும் மண்டபத்தை நிறைக்கிறது.

தலைவர் திரு.திருமதி. ஞானதாஸ் இருவரையும் அழைத்து அனைவரது கரகோசத்தின் நடுவே நினைவுப் பரிசில்களை வழங்குகிறார்.

குறும்படங்கள் பற்றி கலந்துரையாடப் போகிறீர்களா என்று பார்வையாளர்களைப் பார்க்கிறார்.

பார்வையாளர்கள் யுத்த கோரத்திலிருந்து இன்னும் விடுபட்டதாக இல்லை.
அதிகமானவர்கள் சினிமா மீடியாவில் இருப்பவர்கள்.
அமைதியாகவே இருக்கிறார்கள்.
பேசுவதாக இல்லை.

திரு.ஞானதாஸ் அனைவருக்கும் நன்றி கூறியதோடு பார்வையாளர்கள் திரு.திருமதி. ஞானதாஸ் இருவரைச் சுற்றி நின்று பேசத் தொடங்குகிறார்கள்.

யுதார்த்தம் சினிமாவுக்குள் வரும் போது அது நிஜம்..................
சினிமா தெரிந்தவனைக் கூட பாதித்து மௌனமாக்கிவிடுகிறது என்பதற்கு இந் நிகழ்வு உதாரணம்.

திரைப்பட விழாக்களில் கேள்விகளைத் தொடுத்து இயக்குனர்களை விமர்சிக்கும் நண்பன் ஒருவனிடம்
ஏன் இன்று பேசமல் இருக்கிறாய் என்று கேட்கிறேன்.

இது கடினமாக இருக்கிறது.
அமைதிதான் இங்கே சமர்ப்பணமாக வேண்டும் என்கிறான்.
சுவிஸ் மக்கள் யுத்தங்களைப் பார்த்தவர்கள் இல்லை.
எங்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
அதுவும் பச்சிளம் குழந்தைகள் பாடு நெஞ்சை நெகிழ வைக்கிறது என்கிறான்.

அமைதியோடு கலைகிறோம்........................

மறு நாள் காலையில் மற்றுமொரு சுவிஸ் நண்பன் தொலைபேசி வழி
"உன்னிடம் சொல்லாமல் வந்து விட்டேன் என்று வருத்தமாக இருந்தது.
என்னை மன்னித்துவிடு.
நானும் எனது காதலியும் நேற்று இரவு பேசிக் கொள்ளவே இல்லை.
இன்னும் இதயம் பாரமாகவே இருக்கிறது என்று கூறி தொலைபேசி தொடர்பை துண்டித்துக் கொள்கிறான்.

நானும் இப்போதைக்கு அந்த 7 குறும்படங்களின் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அமைதியாகவேதான் என் தாக்கங்களை வெளிப்படுத்தலாம்...................</span>

[size=15]AJeevan
Reply


Messages In This Thread
சமாதானச் சுருள் திரை ம - by AJeevan - 08-05-2004, 01:18 PM
[No subject] - by AJeevan - 08-06-2004, 07:15 PM
[No subject] - by Ilango - 08-09-2004, 03:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)