08-05-2004, 12:47 PM
தமிழீழ அரசு உருவாகி ஐ.நா. வில் புலிக்கொடி பறக்கும் நாள் தூரத்தில் இல்லை: சபையில் சிவாஜிலிங்கம் எம்.பி.
[ வீரகேசரி ] [ வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2004, 4:23 ஈழம் ]
வடக்கு-கிழக்கு மாகாண சபை ஒன்று அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. ஆகவே விரைவில் தனித்தமிழீழ அரசு உருவாக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் புலிக்கொடி பறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சார சபைகள் ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கையில் மாறி மாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கியதில்லை. இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைப்பதற்காக புலிகள் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் யோசனை ஒன்றைச் சமர்ப்பித்தார்கள். ஆனால் இதுவரையும் அந்த யோசனை அடிப்படையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை. எனவேதான் போரா? சமாதானமா? என்பதை இந்த அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின்போது புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதனாலேதான் தமிழ் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இடைக்கால நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சை ஆரம்பித்து இடைக்கால நிர்வாகசபை வழங்கப்பட்டால் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழலாம். அவ்வாறு இல்லையேல் தனித்தமிழீழ அரசு உருவாகும். இதனையடுத்து நிறுத்தி விட முடியாது. ஐ.நா. சபையில் தமிழீழ அரசின் புலிக்கொடி பறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அவ்வாறு அமையும் தமிழீழ அரசு ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு தங்கத்தில் சிலை அமைக்கும் ஏனெனில் தமிழீழ அரசு உருவாக வழிவகுத்தவர்கள் ஜே.வி.பி.தான் என்றார்.
சிவாஜிலிங்கம் எம்.பியின் உரை இலங்கை பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்திற்கு முரணானது. எனவே அவரின் உரையை ஹன்சாட் பதிவு புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என ஜே.வி.பி. உறுப்பினர் விமல் வீரவன்ச சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார்.
நன்றி புதினம்