08-05-2004, 12:42 PM
மட். மாவட்டத்தை கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக பிரகடனப்படுத்த வேண்டும்: தமிழ் எம்.பிக்கள் வலியுறுத்தல்
[ மட்டக்களப்பு ஈழநாதம் ] [ வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2004, 13:12 ஈழம் ]
மட்டக்களப்பு மாவட்டத்தை கல்வியால் பின்தங்கிய கல்வி மாவட்டமாக பிரகடனப்படுத்துமாறு மட்டு. அம்பாறை தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், பா.அரியநேத்திரன், க. தங்கேஸ்வரி, எஸ்.ஜெயானந்தமூர்த்தி, த.கனகசபை மற்றும் பத்மநாதன் ஆகியோர் நேற்றுக் காலை கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி தரா டிமெல் அவர்களைச் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்தனர்.
இசுறுபாயாவிலுள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் சுமார் இருமணி நேரம் சந்திப்பு நடைபெற்றது.
வடக்குக் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே பின்தங்கிய கல்வி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்படாததால் பல்கலைக்கழக அனுமதி உட்பட பல விடயங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இந்த மாவட்டத்தினை கல்வியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சின் செயலாளர் விரைவில் மாவட்டதினை பின்தங்கிய மாவட்டமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதாக குறிப்பிட்டாரென மட். மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழநாதத்திற்குத் தெரிவித்தனர்.
நன்றி புதினம்