Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குருத்து மாதஇதழின் சிறுகதைப்போட்டி
#1
எழுத்தார்வலர்களுக்கு எம் இனிய வணக்கங்கள்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் குருத்து மாதஇதழ் தன் இரண்டாம் அகவையில் கால் பதிக்கவுள்ளமையாலும் அவ்விதழ் குருத்தின் இருபத்தைந்தாவது இதழாதலாலும் ~~குருத்து வெள்ளி மலர்|| வெளியிடப்படவுள்ளது.

வெள்ளிமலரின் வரவைச் சிறப்பிக்கும் முகமாகவும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாகவும் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்த ~~குருத்து கலை இலக்கியக் குழு|| தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் உங்கள் சிறுகதைகளையும் போட்டிக்கு அனுப்பிவைத்து ~~குருத்து மாதஇதழின்|| தமிழ்ப் பணியோடு இணைந்துகொள்ள அழைக்கின்றோம்.

இப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொள்ளும் சிறுகதைகள் குருத்தின் வெள்ளிமலரில் பிரசுரிக்கப்படும்.

முதல் மூன்று இடங்களைப் பெறும் சிறுகதைகளும் சிறந்த சிறுகதைகளாகத் தெரிவு செய்யப்படும் சிறுகதைகளும் குருத்தின் மாதஇதழ்களில் பிரசுரிக்கப்பட்டு குருத்து மாதஇதழ் வெளியிடவுள்ள குருத்தின் சிறுகதைத் தொகுதிகளிலும் வெளியிடப்படும்.

போட்டி பற்றிய விபரங்கள்

1.குருத்து கலை இலக்கியக் குழுவில் அங்கம்வகிப்பவர்கள் தவிர்ந்த யாவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

2.சிறுகதைகள் தாயகம் தொடர்புடையனவாகவோ புலம்பெயர் வாழ்வியல் தொடர்புடையனவாகவோ இருத்தல் அவசியம்.

3.வேறு சஞ்சிகைகளிலோ, பத்திகைகளிலோ வெளிவந்த சிறுகதைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

3.தேசியத்திற்கு விரோதமான கருத்துக்களை எழுதுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

4.முடிந்தவரை து}ய தமிழ்ச் சொற்களையே உபயோகப்படுத்துதல் வேண்டும். உரைநடை வாக்கியங்களுக்கு விதிவிலக்கு உண்டு.

5.மின்னஞ்சல் ஊடாகச் சிறுகதைகளை அனுப்புவோர் பாமினி எழுத்துருவில் ஏ4 பக்கத்தில் 12 புள்ளி அளவில் மூன்று பக்கங்களுக்கு குறையாது இருத்தல் வேண்டும். அதன் பிரதியொன்று தபாலிலும் அனுப்பப்படல் வேண்டும்.

6.கையெழுத்துப் பிரதியாக அனுப்புவோர் தெளிவான எழுத்தில் ஏ4 ஐந்து பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.


7.புனைபெயரில் எழுதுபவர்க்ள் சொந்தப்பெயர், முகவரி முதலான விபரங்களோடு அனுப்பவும்.

ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய கடைசித்திகதி: 15.09.2004

மின்னஞ்சல் முகவரிConfusedirukathai@swissinfo.org

தபால் முகவரி: தொலைபேசி:

Kuruthu 004176/324 10 79
Swiss Tamil Magazine
Wattstr 4
4056 Basel
Switzerland


Reply


Messages In This Thread
குருத்து மாதஇதழின் சி - by Mayuran - 08-05-2004, 12:22 AM
[No subject] - by tamilini - 08-06-2004, 01:39 PM
[No subject] - by sOliyAn - 08-09-2004, 01:03 AM
[No subject] - by vasisutha - 08-09-2004, 02:44 AM
[No subject] - by kavithan - 08-09-2004, 03:45 AM
[No subject] - by tamilini - 08-09-2004, 05:56 PM
[No subject] - by vasisutha - 08-09-2004, 07:46 PM
[No subject] - by tamilini - 08-09-2004, 07:55 PM
[No subject] - by sOliyAn - 08-09-2004, 08:13 PM
[No subject] - by vallai - 08-13-2004, 07:16 PM
[No subject] - by tamilini - 08-13-2004, 09:44 PM
[No subject] - by shanmuhi - 08-15-2004, 09:50 PM
[No subject] - by sOliyAn - 08-16-2004, 02:08 AM
[No subject] - by shanmuhi - 08-16-2004, 10:18 PM
[No subject] - by kavithan - 08-17-2004, 08:11 AM
[No subject] - by sOliyAn - 08-17-2004, 08:20 PM
[No subject] - by kavithan - 08-17-2004, 08:26 PM
[No subject] - by tholar - 09-30-2004, 02:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)