07-18-2003, 04:19 PM
நல்லது இளைஞன் அவர்களே எமது பார்வை அர்த்தமில்லாததாக இருக்குமானால்....மனிதக் கூர்ப்பின் பாதயில் மேலே விளக்கப்பட்டதற்கு உங்களால் சரியான எதிர்க் காரணத்தை தரமுடியுமா....? அது மட்டுமன்றி ஆண்கள் பெண்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கின்றனர் என்றால் எத்தவகையான அடக்குமுறைகள்...அவை உயிரியல் நடத்தைக் கோலத்துக்கு புறம்பான செயல்களாக கருதப்படுவதற்கான காரணங்கள்...அவற்றிற்கான ஆண்களின் தேவையென்ன...அப்படி அடக்குமுறையை பிரயோகிப்பதனால் ஆண்கள் அடையும் உயிரியல் நன்மை என்ன...... அதனால் மனிதன் அடைந்த அல்லது அடையும் நன்மை தீமை என்ன...? என்பவற்றை விளக்கினீர்கள் என்றால் எக்கருத்து யதார்த்தத்தின் பாதையில் செல்கிறது என்பது புரியும்...நீங்கள் மனிதனை பெண்களை பிரித்துப்பார்க்கலாம் ஆனால் எம்மைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என்ன இரு பிரிவினரையும்... மனிதன் ....உலக உயிரி என்ற கோட்பாட்டில் வைத்துத்தான் பார்க்கின்றோம் அப்படிப் பார்த்தால்...இங்கு எழுதப்படுவதெல்லாம் இயற்கைக்கு உயிரியலுக்கு மாறான நடைமுறைச் சாத்தியமற்ற வெற்றுக் கூச்சல்கள் என்பது இலகுவாக விளங்கும் எது விஞ்ஞான பூர்வமானது என்பதும் புரியும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

