07-18-2003, 03:52 PM
Quote:பெண் விடுதலைக்கான அடிப்படை இதுதான்: பெண்களுடைய சுயசிந்தனையும்பெண்களுடைய சுயசிந்தனையையும் அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாட்டையும் மையமாகக் கொண்டு 'உண்மையான" பெண்விடுதலைக் குரல் எழும்பினதென்றால்.. அந்தக் குரலானது யாருக்கு எதிராகக் கிளம்பியது? பெண்ணின் அனுமதியின்றி, சுயசிந்தைனைக்கும் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் ஆண்கள் எவ்வாறு தடைபோட முடியும்? இன்று எமது விடுதலைப் போராட்டத்தை எடுத்துப் பாருங்கள்.. எவ்வளவு தியாகங்கள்.. அழிவுகள்.. சாதனைகள் என்று வளர்ந்து வந்திருக்கிறது? அதைப்போல பெண்விடுதலையை முன்னெடுக்க பெண்கள் என்ன செய்யவேண்டும்.. விடுதலை என்றால் என்னவென்று கற்றுக்கொள்ள வேண்டும்.. தியாகம் மனத்தைரியம் அவர்களுக்குள் உருவாகவேண்டுமல்லவா?! தைரியமும் தியாகமும் இன்றி, 'குரைக்கிற நாய் கடியாது" என்பதற்கேற்ப வெறுமே 'ஆண்கள்.. ஆண்கள்.." என்று ஆண்கள் மீது கரிபூசுவதையும்.. அந்தப் பூசல்களை தமது கம்பீர மீசைகளாக ஏற்று ஆண்கள் அலட்சியமாக இருப்பதையும்தானே பார்க்கிறோம்.
அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாடும். இதை மையமாக வைத்துத்
தான் "உண்மையான" பெண் விடுதலைக் குரல் எழும்பிற்று.
ஒரு காலத்தில் மேடைகளில் அடுக்குமொழிகளில் கத்திக் குழறி, இரத்தத் திலகமேற்று, பாராளுமன்றம் சேர்ந்து, சிங்களப் பகுதியில் சிங்களச் 'சிறி" இலக்க ஜீப்பிலும், தமிழ் பகுதியில் தமிழ் 'சிறி" இலக்க ஜீப்பிலும் பவனிவந்த அரசியல் வேசதாரிகள் கண்ணை மூடிக்கொண்டு, உரிமைகளுக்காகப் போராடுவதைவிடுத்து, சிங்களம் மேலான குரோதத்தை தமிழருள் வளர்த்தெடுத்து, தமிழரை சிங்கள மொழி தெரியாதவராக மாற்றியதைப்போல, வெறுமே பெண்களின் விடுதலை என ஆண்கள்மேல் பெண்களுக்கு குரோதத்தை வளர்த்து, அவர்களை ஆண்களைப் புரியாதவர்களாக மாற்றி வாழ்வைப் பொறுத்த சூனியங்களாக மாற்ற விளைவதா பெண்ணியம்?!
பெண்களுக்கு விடுதலை வேண்டுமானால் ஆண்களைப் பிழை கூறுவதல்ல அர்த்தம். கருத்துகளின் ஊடான விழிப்பும், அதன் கடைப்பிடித்தலும், செயற்பாடுமே விடுதலையை வரவழைக்கும். அன்றேல் உலகம் உள்ளளவும்.. ஆண் துவேசிப்புமாத்திரமே இலக்கிய இதிகாசங்களாக முற்போக்கெனும் பெண்களால் வரிகளாகும் வளர்ச்சியின் எல்லை முடிவிலி நோக்கி நீளும்.
.

