07-18-2003, 09:19 AM
வணக்கம் குருவிகள்...
அடிப்படைப்படைப் பிரச்சினைகள் அல்ல, அடிப்படைப் பிரச்சினை. ஒருமை!
பெண் விடுதலை, அல்லது பெண்ணியம் என்பதன் தோற்றம் ஒரே ஒரு
அடிப்படையை வைத்துத்தான் உருவானது. உங்களுக்கு ஒரு அடிப்படை,
இன்னொருவருக்கு ஒரு அடிப்படை என்பது பெண் விடுதலையைப் பொறுத்தவரை
இருக்கமுடியாது. அப்படியிருந்தால் அது பெண்விடுதலைக்கு அப்பாற்பட்டது.
பெண் விடுதலைக்கான அடிப்படை இதுதான்: பெண்களுடைய சுயசிந்தனையும்
அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாடும். இதை மையமாக வைத்துத்
தான் "உண்மையான" பெண் விடுதலைக் குரல் எழும்பிற்று.
நீங்கள் முன்வைக்கின்ற பிரச்சினைகளெல்லாம், உங்கள் வெளித்தோற்றப்
பார்வையின் வெளிப்பாடு மட்டுமே. அவற்றின் உட்புகுந்த ஆய்வு அல்ல. எப்படி
நமது மூத்த தமிழர்கள் "சூரியகிரகணத்திற்கு", சூரியனைப் பாம்பு விழுங்குகிறது
என்று காரணம் கற்பித்தார்களோ, அதுபோலத்தான் உங்கள் பார்வையும் இருக்கின்றது.