08-04-2004, 06:39 PM
<b>இடைக்கால நிர்வாக சபை யோசனைகளின் அடிப்படையில் புலிகளுடன் பேசப்போவதாக ஒருபோதும் அறிவிக்கவில்லை: ஜனாதிபதி </b>
இடைக்கால நிர்வாக சபை யோசனைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசப்போவதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற போதே, ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைக்கால நிர்வாக யோசனைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் ஜனாதிபதி பேசினால், கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தாம் வெளியேறப்போவதாக ஜே.வி.பி. வெளியிட்ட கருத்துத் தொடர்பாக இக்கூட்டத்தில் கடுமையாக அதிருப்தி தெரிவித்த ஜனாதிபதி, இடைக்கால நிர்வாக யோசனைகளின் அடிப்படையில் பேசப்போவதாக தாம் ஒருபோதும் தெரிவிக்காத நிலையில் ஜே.வி.பி. இவ்வாறு பேசியது குறித்து கடுமையாக விசனமடைந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இடைக்கால நிர்வாக சபை அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்ததை இக்கூட்டத்தில் ஜே.வி.பி. சுட்டிக்காட்டிய போது, இடைக்கால நிர்வாக யோசனைகளில் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேசப் போவதாக தானோ, ஜனாதிபதி செயலகமோ ஒருபோதும் உத்தியோகபுூர்வமாகத் தெரிவித்திருக்கவில்லை என்று ஜே.வி.பி.யினருக்கு ஜனாதிபதி பதிலளித்ததாகவும் தெரிய வருகிறது.
இக்கூட்டத்தின்போது ஜனாதிபதி ஜே.வி.பி.யினருடன் மிகவும் கடுமையாகவே நடந்;து கொண்டதாகவும், இடையில் தமக்கு வேறு பணியிருப்பதாகக் கூறி அவர் கூட்டத்திலிருந்து வெளியியேறி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன
---------------------------------------
<b>
இடைக்கால தன்னாட்சி அலகை ஏற்றுப் பேச்சு நடாத்த மறுப்பதாக வெளியான செய்தியை மறுக்கிறது ஜனாதிபதி செயலகம் </b>
விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையின் அடிப்படையில் பேச்சுக்களை நடாத்த ஜனாதிபதி மறுத்துள்ளதாக சிறீலங்காவின் தேசிய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், தான் அப்படி எதுவும் கூறவில்லை என்றும் மறுதலித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.
இடைக்கால தன்னாட்சி அலகின் கீழ் பேச்சுநடாத்துவது குறித்த ஜனாதிபதியின் கருத்தில் மாற்றமில்லை என்றே தான் குறிப்பிட்டதாகவும், அது முற்றிலும் திரிவுபடுத்தப்பட்டு, ஜனாதிபதி இதற்கு மறுப்புத் தெரிவித்தது போல செய்தி வெளியாகியுள்ளது என்றும் குறிப்பிடும் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சிறிசேன, இத்தகைய செய்தியை ஜனாதிபதி செயலகம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
---------------------------------
<b>ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இராஜினாமா செய்துள்ளார். </b>
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு தகுதியான ஒருவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் நியமிக்கும் என்று ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
வேலைப்பளு காரணமாக தனது தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக சந்திரிகா வெளியே கூறினாலும், இதற்கு நிட்சயமாக உட்காரணங்கள் ஒருசில இருக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.
செய்திகள் புதினத்திலிருந்து
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39062000/jpg/_39062789_ktunga_ap2b.jpg' border='0' alt='user posted image'>
நான் என்ன சொல்கிறேன்...என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியாது....மக்களுக்கு எப்படி தெளிவிருக்கும் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->