08-04-2004, 06:09 PM
இந்தியாவில் <b>51</b> லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் !!
இந்தியாவில் தற்போது 51 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக மத்திய புள்ளி விவர மற்றும் திட்ட அமலாக்கல் துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் எய்ட்ஸ் குறித்த சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
மும்பைதான் இந்தியாவின் எய்ட்ஸ் நுழைவாயிலாக இருக்கிறது. மும்பையிலிருந்தும்,மஹாராஷ்டிராவில் இருந்தும்தான் இந்தியா முழுக்க எய்ட்ஸ் பரவுகிறது. கர்நாடாகவில் அதிக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது எனது சொந்தத் தொகுதியான மங்களூரில் தான். இங்கு இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர் வேலைக்காக மும்பை சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சமாக உயர்ந்துள்ளது. இப்போதைக்கு பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகத் தோன்றினாலும் வருங்காலத்தில் இது மாறக் கூடும். ஏனெனில் இந்த இரு மாநிலங்களில் எய்ட்ஸ் நோயைக் கண்டறிவதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை.
13வது மக்களவையில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக மாநில அளவில் சட்டசபை உறுப்பினர்கள்அடங்கிய எய்ட்ஸ் விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக கடுமையாகப் போராடினால்தான், சாதாரண மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு வரும் என்பதாலேயே இத்தகைய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் எய்ட்ஸ்க்கு எதிரான விழிப்புணர்வு திட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் பெர்னாண்டஸ்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>