08-04-2004, 05:43 PM
kuruvikal Wrote:[quote=vennila][size=24]<b> காதல்</b>
கண்ணிலே தொடங்கியது
கருத்திலே புகுந்தது
இதயமதில் கொலுவிருக்குமே
எண்ணமதில் தேனாக இனிக்கும்
இளமையென்ன முதுமையென்ன
கன்னமதில் தோன்றும் நாணமதில்
காணலாமே காதலை
மென்மையதில் ரோஜாதானே
தோற்றுவிட்டால் முள்ளாய் மாறுமே!
காதலது மாறிக் காமமது மேலோங்கின்
வேம்பாய்க் கசக்குமே!
கல்மனம் படைத்தோரே காதலதை வெறுப்பார்
கடிவாளம் பூட்ட நினைப்பார்
கடைசியில் தோற்றும் போவாரே தூய காதலிடமே!
காட்டாற்று வெள்ளத்திற்கு
கைவிலங்குதான் போடமுடியுமோ?
கலைநிலவதை திரைபோட்டுத்தான் மூடமுடியுமோ?
காதலித்தோர் நெஞ்சங்கள்
மலர்போல் மென்மையதே
காதலித்தோரை பிரிப்போரின்முன்னே
மலைபோல் வன்மையதே!
விண்ணவர் முதல் மண்ணவர்வரை
போற்றும் காதலை
ஆதாம் ஏவாள் அவனியிலே
ஆரம்பித்த காதலை
அரசன்முதல் ஆண்டிவரைபின்பற்றியே
பித்தாக மாறியோருமண்டு
பெருங்கவிஞராய் வளர்ந்தோருமுண்டு
சொத்தாக நினைத்து
சொர்க்கத்தில் திளைத்தோருமுண்டு!
சாம்ராஜ்யங்கள் சரிந்து
மண்மேடாய் மாறியதும் காதலாலே
ஏழையின் காதல் இறுதிவரை
ஊமையாய் உள்ளமதில் கோட்டைகட்டி
வேளைவராமலே விழிநீரை சிந்தியதுமுண்டு
தென்றலாய் மாறித் தித்திப்புக் கொடுக்கும் காதல்
சிலவேளை புயலாக மாறி புவனமதில்
பூகம்பத்தை உருவாக்கியதுமுண்டு!
கண்ணன் ராதை கண்டதும் காதலே
கோவலன் மாதவியும் கொண்டதும் காதலே!
முருகள் தினைப்புனத்தில் வள்ளியுடன்
திளைத்ததும் காதலினால்
காதல் காதல் காதல் இது இல்லையேல்
இப்புவியில் சாதல் சாதல் சாதல்
இது மடமையன்றோ!
தூய காதலது துயரங்களை மெல்லக் கடந்து
இப்புவிவிட்டு எப்புவியும் தொடருமே!.[/color]
சுட்டி உங்கள் கவிதையும் அருமை... என்ன யாரையோ கல் மனசுக்காரர் என்று திட்ட நினைச்சிருக்கிறீங்க திட்டீட்டிங்க....அது யாரவரோ...????! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->