08-04-2004, 05:31 PM
ஐ.ம.சு. கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி சந்திரிகா இராஜினாமா!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இராஜினாமா செய்துள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு தகுதியான ஒருவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் நியமிக்கும் என்று ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
வேலைப்பளு காரணமாக தனது தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக சந்திரிகா வெளியே கூறினாலும், இதற்கு நிட்சயமாக உட்காரணங்கள் ஒருசில இருக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.
- ஜே.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்ததால் தற்போது வலுவிழந்துள்ள சுதந்திரக் கட்சியை மீண்டும் தனிக்கட்சியாக இயங்க வைப்பது
- ஜே.வி.பி.யின் அழுத்தங்களை வேறு விதமாகக் கையாள முடிவெடுத்துள்ளமை
- சிறீலங்காவில் இடைக்கால ஜனாதிபதி ஆட்சியை அறிவித்து, நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவது
போன்ற சில இரகசிய அரசியற் காய் நகர்த்தலுக்காகவே, சந்திரிகா இந்தப் பதவி விலகலைப் பயன்படுத்தவுள்ளதாகக் கருதப்படுகின்றது.
இதற்கிடையில், இந்தப் பதவி விலகலின் மூலம், ஜனாதிபதி கதிரையில் தனக்கு விசுவாசமுள்ள வேறு ஒரு நபரை உட்கார வைத்து, தான் பிரதமராகும் திட்டமும், அதன் மூலம் நாடாளுமன்றத்தை தன் தலைமையில் நடாத்தி, ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்து விடுவது சந்திரிகாவின் தற்போதைய அவசர இரகசியத் திட்டமாக அமைகிறது என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தான் பிரதமராக வருவதன் மூலம், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சில தில்லுமுல்லுக்களை சந்திரிகா வருகிற சில வாரங்களில் உருவாக்குவார் என்றும் அந்த ஆய்வாளர் ஆரூடம் கூறியுள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>