08-04-2004, 02:42 PM
புலிகளின் காவல்துறை பொறுப்பாளரிடமிருந்து எமது பொலிஸார் ஆலோசனை பெற வேண்டும்..
அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே
பொலிஸ் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்போருக்கு வெட்கம், மானம், ரோர்ம் ஏதாவது இருந்தால் அவர்கள் உடனடிýயாக தமது பதவிகளை இராஜிநாமாச் செய்ய வேண்டும் என பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழு மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பொலிஸ் திணைக்களத்தின் தரம் தாழ்ந்துவிட்டது. சில இடங்களில் பொலிஸார் மாதா மாதம் மாமூýல் வசூýலித்து வருகின்றனர். இன்னும் சில இடங்களில் பொலிஸார் குடு வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களது நடவடிýக்கைகளுக்குத் துணை புரிந்து வருவதுடன், அவர்களது வாகனங்களைப் பெற்றுத் தமது சொந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
குடு வியாபாரிகள் பொலிஸாருக்குரிய கொமிர்னைக் கொடுக்காவிட்டால் அவர்களது வீடுகளைச் சுற்றி வளைப்பார்கள். பின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்து விடுவார்கள்.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்திலேயே பொலிஸாரின் நிலை இவ்வாறு கேவலமான நிலைக்குச் சென்றது. அந்த ஆட்சிக் காலத்தில் பொலிஸார் தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டார்கள்.
ஜனாதிபதியின் கூýட்டத்திற்குச் சென்ற பொதுமக்கள் கூýடப் பொலிஸாரால் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அந்தளவிற்குப் பொலிஸாரின் அடாவடிýத்தனங்கள் அதிகரித்துள்ளன.
ஆனால், யாழ்ப்பாணத்தில் ஐ.ஜி.பி. நடேசனின் (புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர்) நிர்வாகத்தில் அப்படிý நடக்காது என்று நம்புகின்றேன். ஊழலற்ற நிர்வாகத்தை எப்படிý நடத்துவது என்பது குறித்து அவரிடமிருந்து நாம் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
பொலிஸ் திணைக்களத்திற்குரிய சில இரகசிய ஆவணங்களைப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இங்கு சமர்ப்பித்துள்ளார். இவ் ஆவணங்கள் எவ்வாறு அவரிடம் வந்தது. இது குறித்துப் பொலிஸ் ஆணைக்குழு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
நன்றி தினக்குரல்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>