07-17-2003, 09:07 PM
உண்மைதான் அலை... உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்.. பெண்களில் பலர் தனஇனம்பிக்கை அற்றவர்களாக அல்லது தமது குடும்பத்தில் பிரிவுகள் வரக்கூடாது என்ற விட்டுக்கொடுக்கும் போக்கில் வாழ்வதை அவதானிக்க முடிகிறது. ஆனால் இது குறிப்பிட்ட ஆண்களுக்கு சாதகமாக அமைவது என்னவோ உண்மைதான்.
சுவிசில் நடந்த கறுப்பு ஜுலையிலே, தமிழினி அவர்கள்கூட 'பெண்கள் மேலும் மேலும் கற்றலின் ஊடாக போலித்தனமான அடக்குமுறைகளைவிட்டு வெளியே வரமுடியும்" என்றரீதியில் கருத்து வெளியிட்டார்.
ஆம்: பெரும்பாலான தமிழ் பெண்கள் குறிப்பிட்ட காலத்துடன் கல்வியை நிறுத்திவிடுகிறார்கள். ஏதாவது புதிய விசயங்களை அறியக்கூட அவாவின்றி உள்ளார்கள். உதாரணமாக வீட்டில் கணணி இருந்தாலும்.. அதை தொடக்கூட ஆர்வமில்லாதவர்களாகவே பல பெண்கள் காணப்படுகிறார்கள்.. வீட்டில் உள்ள சற்றலைற் தொலைக்காட்சியில் தமிழ் தொடர்கள் பார்ப்பதற்குகூட... அதை இயக்குவதற்கு பிள்ளைகளையோ கணவனையோ ஏவுவதையே காணக்கூடியதாக உள்ளது. அவர்களால் முடியாது என்றில்லை.. அதைப்பற்றி அறிவதற்கான ஆர்வம் பெரும்பாலான பெண்களிடம் இல்லை என்பதையே அவதானிக்க முடிகிறது.
கணவன்.. பிள்ளைகள்.. குடும்பமென பொறுப்போடும் அரமையோடும் கொண்டு நடாத்தும் பெண்களுக்கு இவை எல்லாம் வெகு சர்வசாதாரணம். எனினும் அவர்களுக்கு அவைகளில் ஆர்வமில்லை. இப்படியான ஆர்வமில்லாமைதான் ஆண்கள் தொடர்ந்து தவறு செய்ய அல்லது குறைகேட்க சந்தர்ப்பமாகிறதோ?

.