08-03-2004, 02:41 PM
நிராயுதபாணிகளான விடுதலைப்புலிகள் மீது சிறிலங்கா அதிரடிப்படை சீண்டுகிறது: பாரதூரமான விளைவு ஏற்படுமென்கிறார் குயிலின்பன்
அம்பாறை மாவட்டத்தில் நிராயுதபாணிகளாகப் பயணம் செய்யும் விடுதலைப்புலிப் போராளிகளை வீதிச் சோதனையென்ற போர்வையில் சோதனைக் கெடுபிடிகளுக்குள்ளாக்கி வரும் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் நடவடிக்கைக் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் த.குயிலின்பன் பெரும் விசனமும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளென உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் படையினர் இத்தகைய சோதனைக் கெடுபிடிகளை மேற்கொள்வதாகவும், ஆண்களான மேற்படி விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் இத்தகைய சோதனை நடவடிக்கைகளின் போது தமது பெண் போராளிகளிடம் உடல் சோதனைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் பொதுமக்களுடன் சேர்ந்த வந்த தமது போராளிகளை விசேட அதிரடிப் படையினரும் பொலிசாரும் இவ்வாறு சோதனைக் கெடுபிடிக்குள்ளாக்கியுள்ளதுடன்,
அதேபோல் திங்கட்கிழமையும் தமது ஆண், பெண் போராளிகளை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்து இத்தகைய கெடுபிடிகளை விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் மேற்கொண்டு வருவது ஏதோ ஒரு வகையில் எம்மைப் படையினர் சீண்டும் செயலெனக் கருத வேண்டியுள்ளதென்றும்,
எதிர்காலத்தில் இத்தகைய கெடுபிடிகளை படையினர் நிறுத்த வேண்டும். கண்காணிப்புக்குழு முன்னிலையிலேயே எமது போராளிகள் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன். இனிமேலும் போராளிகள் இத்தகைய சோதனைகளுக்கு இசைந்து கொடுக்கமாட்டார்களென்றும், சீண்டுதல் தொடர்ந்தால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையேற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>