08-03-2004, 02:31 PM
[b]வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகம் மீது கிரனைட் தாக்குதல்
வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகம் மீது இன்று காலை 8.30 மணியளவில் கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும், நான்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் காயமடைந்துள்ளதாக, கிழக்குப்பிராந்திய பொலிஸ் மா அதிபர் நெவில் விஜயசிங்க தெரிவித்தார்.
அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
200 மீற்றர் தொலைவிலிருந்து கிரனைட் லோஞ்சர் ஊடாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கிழக்குப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>