Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004
#32
கிரிக்கெட்: இலங்கை வீரர்களுக்கு அபராதம்

<img src='http://www.thatstamil.com/images23/sachin270.jpg' border='0' alt='user posted image'>

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை இந்தியாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைகளை மீறியதற்காக இலங்கை அணியின் சங்கக்கரா, தில்ஸான் மற்றும் உபல் சந்தனா ஆகியோருக்கு ஐசிசி நடுவர் அபராதம் விதித்தார்.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. பதான், சச்சின், சேவாக் ஆகியோர் தங்களது பந்து வீச்சால் இலங்கை பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சச்சின் 10 ஓவர்கள் வீசி 40 ரன்களைக் கொடுத்து ஜெயவர்தனே, தில்ஷான் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதான் 33 ரன்களைக் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சேவாக் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினாலும் 10 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணவர்தனே, ஜெயசூர்யா இருவரும் 31 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த அட்டப்பட்டு, சங்கக்கரா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 116 ரன்களைக் குவித்தது.

அட்டப்பட்டு 65 ரன்களை எடுத்திருந்தபோது எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார். 53 ரன்களை எடுத்திருந்த சங்கக்கரா சேவாக் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார். பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.

229 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களையே எடுக்க முடிந்தது. அணியின் நட்சத்திர வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிலைத்து நின்று 74 ரன்களைக் குவித்தார்.

இறுதியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து இலங்கை கோப்பையை வென்றது.

போட்டியின்போது இந்திய வீரர்களைக் கிண்டலடிக்கும் வகையில் சைகை காட்டிய சங்கக்கரா, தில்ஸான் மற்றும் உபல் சந்தனாவுக்கு ஐசிசி நடுவர் மைக் பிராக்டர் அபராதம் விதித்தார். சங்கக்கராவுக்கு ஒரு நாள் ஊதியத்தையும், தில்ஸான் மற்றும் சந்தனாவுக்கு சம்பளத்தில் பாதியையும் அபராதமாக கட்ட உத்தரவிட்டார்.

தோல்வி குறித்து இந்தியக் கேப்டன் கங்குலி கூறியதாவது:

229 ரன்கள் என்பது எளிதான இலக்குதான். ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததால் வெற்றி பெற முடியவில்லை. இந்த தொடரில் வீரர்கள் அனைவரும் முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை. இத் தோல்வியால் தளர்ந்து விட மாட்டோம். ஹாலந்தில் நடை பெறும் 3 நாட்கள் போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 07-20-2004, 12:47 AM
[No subject] - by kavithan - 07-20-2004, 05:20 AM
[No subject] - by kavithan - 07-20-2004, 05:27 AM
[No subject] - by ÀÃ狀¡¾¢ - 07-20-2004, 07:39 AM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:30 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:35 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:36 PM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 02:42 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:52 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:59 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 03:03 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-23-2004, 09:02 PM
[No subject] - by kavithan - 07-24-2004, 09:22 PM
[No subject] - by kavithan - 07-24-2004, 09:28 PM
[No subject] - by kavithan - 07-26-2004, 05:03 AM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:28 AM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:33 AM
[No subject] - by tamilini - 07-28-2004, 12:01 PM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:12 PM
[No subject] - by kavithan - 08-01-2004, 08:09 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 08:16 PM
[No subject] - by tamilini - 08-01-2004, 09:08 PM
[No subject] - by kavithan - 08-01-2004, 09:31 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 10:32 PM
[No subject] - by tamilini - 08-01-2004, 10:39 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 10:53 PM
[No subject] - by kavithan - 08-02-2004, 12:47 AM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:30 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:33 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 07:27 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-02-2004, 09:39 PM
[No subject] - by kavithan - 08-23-2004, 11:41 PM
[No subject] - by kavithan - 08-23-2004, 11:42 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 09:14 AM
[No subject] - by kavithan - 08-25-2004, 03:16 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 07:45 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 08:04 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 03:25 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 03:40 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-28-2004, 05:14 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:28 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:28 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:29 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-28-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 09:41 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 11:03 AM
[No subject] - by பரஞ்சோதி - 09-01-2004, 04:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)