08-02-2004, 01:03 PM
வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் குண்டுவெடிப்பு
வெலிக்கந்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் நேற்றிரவு குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செவனப்பிட்டிய பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஊர்காவல் படை வீரர்கள் இருவரும் காயமடைந்துள்ளார்கள்.
இவர்கள் பொலநறுவ வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் லொறியொன்றை சோதனையிட்டபோதே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் பிரதேசத்தில் நடமாடிய ஒருவர் கைக்குண்டை வீசியிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
எனினும், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலநறுவைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.சமங்கம தெரிவித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>