08-01-2004, 11:17 PM
[b]எச்சரிக்கை!
கிழக்கில் நடைபெறும் பிரச்சினைகள் பூதகரமாக மாறும் முன் அவற்றைத் தீர்த்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். போர் நிறுத்த உடன்படிக்கை என்பது நடந்த யுத்தத்தை முடக்கி வைப்பதேயொழிய அது இனப்பிரச்சினைகளுக்கு முடிவு காணவில்லை என்பதை இலங்கை மக்கள் பலர் மறந்த விட்டனர் என்ற நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனின் கூற்றுக்கள் ஒரு வகையில் யாதார்த்தத்தின் பாற்பட்டதாயினும் தமிழர் தரப்பைப் பொறுத்து இது பொருத்தப்பாடானதல்ல.
ஏனெனில், தமிழ் மக்கள் நாளாந்தம் தாம் யுத்த சூழ்நிலையில் வாழ்வதை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலையும் சமிக்கைகளும் கிடைக்கப் பெறுபவைளாகவே உள்ளன. யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்து இரண்டரை ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், இயல்பு நிலை என்பது தோற்றுவிக்கப்பட்டதாக இல்லை. சிறிலங்கா இராணுவத்தின் முழு அளவிலான பிரசன்னத்தைக் கண்கூடாகக் கண்டு வருபவர்களாகவே வடக்கு-கிழக்கில் மக்கள் உள்ளனர்.
அதாவது வடக்கு-கிழக்கிற்குள் பிரவேசிக்கும் எவருமே யுத்த ப10மி-யுத்த சூழ்நிலைக்குள் தாம் பிரவேசிப்பது போன்றதொரு நிலை தோற்றுவிக்கும் வகையில் இராணுவத்தினரின் பிரசன்னம் உள்ளது மக்கள் மீதான சோதனைகள், சிலர் மீது விசாரணைகள் என்பவற்றைச் சந்தித்த பின்னரே மக்கள் வடக்கு-கிழக்கிற்குள் பிரவேசிக்க முடியும்.
அது மட்டுமல்ல, வடக்கு-கிழக்கில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஆயுத பாணிகளாக தரித்துள்ளனர், ரோந்து வருகின்றனர். தேவை ஏற்படும்போது சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். சிலவேளைகளில் வன்முறைகளிலும் ஈடுபடுக்கின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க, வடக்கு-கிழக்கு எங்கும் இராணுவமும் சரி, கடற்படையும் சரி (தரையிலும், கடலிலும்) தமது பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமே உள்ளனர். இதற்கு வெளிநாடுகளிலும் இருந்தும் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சமாதானக் காலம் என்றோ யுத்த நிறுத்த காலமென்றோ அது எதனையும் குறைத்துக் கொண்டதாக இல்லை. இது தவிர வடக்கு-கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தாம் ஒரு யுத்த நிறுத்த காலத்திற்குள் வாழ்ந்துகொண்டிருப்பதான உணர்வையே அற்றுப்போகச் செய்யும் அளவிற்கு அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை நிலவுகின்றது.
இத்தகையொரு சூழ்நிலை நிலவுகையில், தமிழ் மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவோ இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாகவோ எண்ண வாய்ப்பேதும் இல்லை. தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளையே அரசாங்கம் தீர்த்து வைக்க தயாராக இல்லாத நிலையில் இனப்பிரச்சினை தீர்ந்துவிட்டதாகத் தமிழ் மக்கள் எவ்வாறு அர்த்தம் கொள்ளமுடியும், தமது பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாகக் கருத முடியும்? தமிழ் மக்களைப் பொறுத்து யுத்தமானது பிரச்சினை தீர்விற்கானதாய் இருந்ததேயொழிய யுத்தம் தான் பிரச்சினை என்பதாக இருந்ததில்லை. ஆனால் நோர்வேயின் பிரதிவெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன் சொன்னவை சிங்கள மக்களைப் பொறுத்துப் பெரிதும் பொருந்ததக்கதென்றே ஏனெனில், அவர்கள் யுத்தம் நிறுத்தப்பட்டதினால் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவே கருதுகின்றனர். வேறுவிதமாக கூறுவதானால், யுத்தத்தின் விளைவுகளை அவர்கள் மறந்து விட்டார்கள் போல்தெரிகின்றது.
சிங்கள மக்களைப் பொறுத்து யுத்தத்தின் காரணமாக வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தினரின் சடலங்கள் - யுத்தத்தில் இறந்த சிங்கள இளைஞர்களின் - வருவது இல்லாது போய்விட்டது. பாதுகாப்பு ஏற்பாடு என்ற hPதியில் கொழும்பு வீதிகளில் தடைகள், சோதனைகள், தாமதங்கள் இல்லாது போய்விட்டது. தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பிலும் அதைச் சூழவுள்ள இடங்களிலும், குண்டு வெடிப்புக்கள், தாக்குதல்கள், நின்று போயுள்ளன. அதாவது அச்ச உணர்வு நீங்கியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் யுத்தம் முடிவிற்கு வந்ததாகவும், அச்சம் நீங்கிவிட்டதாகவும் கொள்வதில் தவறில்லைதான் அதாவது அவர்களுக்கு யுத்தம் தான் பிரச்சினையே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினை எவையும் பிரச்சினையல்ல. அவை தீர்த்து வைக்கப்படவேண்டியது என்பது அவர்கள் கருத்தல்ல. ஆகையினால் யுத்தம் நின்றதும் அவர்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவே கருதுகின்றனர். முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனால், அவர்கள் யுத்தத்தையும், தமிழர் பிரச்சினையையும் மறந்துபோய்விட்டார்கள். இந்நிலையில் ஆட்சி அதிகாரத்திற்கு போட்டியிடும் அரசியல்வாதிகள் சிங்கள மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முனைகின்றனர். நிரந்தர அமைதிக்கு வழி செய்யும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் முட்டுக்கட்டை போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க யுத்தமே வழியென்ற வகையில் தமது செயற்பாடுகளைத் முன்னெடுக்க முனைகின்றனர். தமது அதிகார அபிலாசைகளுக்காக மக்களை மீண்டும் பலிக்கடாவாக்க முனைகின்றனர்.
நன்றி: ஈழநாதம் and tamilnaatham...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>