08-01-2004, 07:17 PM
<b>கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை </b>
கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.
இதுவரை இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் யாவும் ஒருசிலரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டமையே எனவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாடு யுத்த சூழல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய ஏற்பட்டதன் காரணமாக பொலிசாரின் நடவடிக்கைகள் திசை திருப்பப்பட்டதாகவும் ரணவிராஜா குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு பிரதேசத்தின் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் இந்திரா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த செயற்திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விசேடமாக நெடுந்தூர பேரூந்துகள், உந்துருளிகள், முச்சக்கர வண்டிகள் என்பன இடை இடையே நிறுத்தப்பட்டு சோதனையிடவுள்ளன.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>