08-01-2004, 07:14 PM
புளொட் மோகன் இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக்கு ஒற்றனாக செயற்பட்டவர்: இராணுவப் பேச்சாளர்
கொழும்பு பம்பலப்பிட்டியில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட புளொட் மோகன் என்று அழைக்கப்படும் கந்தையா யோகராசா என்பவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் அல்ல என்று இராணுவப் பேச்சாளர் கேணல் சுமேத பெரெரா தெரிவித்துள்ளார்.
எனினும், இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கிவந்த ஒற்றனாக செயற்பட்டு வந்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒற்றன் என்ற வகையில் தமது கடமைகளை நிறைவேற்றிய காரணமாகவே புளொட் மோகன் என்பவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் நிலவுவதாக கேணல் சுமேத பெரெரா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்தக் கொலையை யார் புரிந்தார்கள் என்பதைக் கண்டறியும் பொருட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட புளொட் மோகன் என்பவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக மக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளர் திலக் ரணவிராஜா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>