08-01-2004, 07:12 PM
புளட் மோகன் இராணுவத்திற்கு தகவல் கொடுக்கும் ஒரு நபரே: சண்டே லீடர் பத்திரிகை
நேற்றுக் கொழும்பில் கொல்லப்பட்ட புளட் மோகன் என அழைக்கப்படும் கந்தையா யோகராசா இராணுவப் புலனாய்வுத்துறையுடன் சம்பந்தப்பட்டவருமல்ல, அவருக்கும் தமக்கு எந்தவிதத் தொடர்புமில்லை என சிறீலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.
ஆனால் இன்று வெளிவந்த சண்டே லீடர் பத்திரிகையில் புளட் மோகன் இராணுவத்திற்கு தகவல் வழங்கும் ஒரு மிக முக்கிய நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இவர் இராணுவத்துடன் இணைந்து செயற்படுத்திய பல தாக்குதல்கள் இராணுவத்திற்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
அத்துருக்கிரிய இராணுவ பாதுகாப்பில்லத்திற்குப் பொறுப்பான மேஜர் நிலாம் என்ற இராணுவ அதிகாரிக்கு மிக நெருக்கமானவராகச் செயலாற்றி வந்த புளட் மோகன் அண்மைக் காலத்திற்கு முன்னர் நுகேகொடப் பகுதியை தனது வதிவிடமாக மாற்றியிருந்தார் என்றும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.
கருணாவிற்கு மிக நெருக்கமானவராக மாறிய புளட் மோகன் பல தடவைகள் கருணாவை தொப்பிக்கல காட்டிற்குள் சென்று சந்தித்தார் எனச் செய்தி தெரிவித்துள்ள மேற்படி பத்திரிகை, புளட் மோகனின் கொலையைக் கண்டித்து சிறீலங்கா தகவற் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
தமது எதிராளிகளைக் கொல்வதன் மூலம் சமாதான முயற்சிக்கும், போர் நிறுத்தத்திற்கும் எதிரான செயலே தொடரப்படுகிறது எனவும், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் ஏற்படுத்தும் பணியில் சிறீலங்கா அரசு சளைக்காமல் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஒப் பசன் புடவை நிலையத்திற்கு புடவை வாங்குவதற்குச் சென்ற புளட் மோகன், நேற்றைய தினம் போயா தினமாகையால் அது பூட்டப்பட்டிருப்பது கண்டு மீண்டும் தான் பயணம் செய்த முச்சக்கர வண்டிக்கு திரும்பிய சமயம் அவரது கைத்தொலைபேசியில் வந்த அழைப்புடன் உரையாடிக் கொண்டே முச்சக்கர வண்டிச் சாரதியை சற்று நேரம் பொறுக்குமாறு கூறிய போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் சண்டே லீடர் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இராணுவமும் அரசாங்கமும் புளட் மோகனுடன் தமக்கு எந்தவிதத் தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளதை மறுத்துரைப்பது போல இப் பத்திரிகைச் செய்தி அமைந்துள்ளதும் மறுபுறத்தே சிறீலங்காத் தகவற் திணைக்களம் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதும் இராணுவத்தின் கூற்றோடு முரன்படுவது இங்கு நோக்கத்தக்கது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>