Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவல நிலை
#1
அவல நிலை
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வாகரை மதுரங்கேணிக்குள மக்களுக்கு எதுவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்ப்படவில்லை, பொதுமக்கள் கவலை.

வாழைச்சேனையிலிருந்து சுமார் 35 கிலோமிற்றருக்கு அப்பால் வாகரை பிரதேச செயலகப்பிரிவில் மதுரங்கேணிக்குளக் கிராமம் உள்ளது. 152 குடும்பத்தினர் வாழுகின்ற மேற்படி கிராமத்தில் மக்களுக்குரிய அடிப்படைவசதிகள் எதுவும் இன்றி வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ள இக்கிராம மக்களை நாம் நேரடியாகச் சென்று வினாவியபோது. எதுவித கடைகளும் அற்ற இக்கிராம மக்கள் பொருட்கள் பெற வேண்டுமானால் 35 கிலோமீற்றர் அளவில் நடந்து வந்தே வாழைச்சேனையில் பொருட்கள் பெறவேண்டும். போக்குவரத்து செய்வதற்குரிய வாகன வசதிகள் எதுவுமில்லை இங்கு வாழுகின்ற 152 குடும்பத்தில் இரண்டு பேரிடம் மாத்திரமே துவிச்சக்கரவண்டி உள்ளது. அனேகமாக இக்கிராமத்திலுள்ள மக்கள் ஏதாவது அவர்களுக்கு தேவையான பொருட்கள் பெறவேண்டுமாயின் போக்கு வரத்திற்குரிய சம்பளம் கொடுத்து துவிச்சக்கரவண்டி உள்ளவர்களிடம் அனுப்புவார்கள். இந்தளவிற்கு வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு கடந்த 2000ம் ஆண்டில் வாகரை போக்குவரத்துச்சபை உபசாலையினால் மேற்படி கிராமத்திற்கு பஸ் சேவை போடப்பட்டது. ஆனால் போடப்பட்ட பஸ் சேவை ஒரு மாதத்தின் பின்பு இடைநிறுத்தப்பட்டது. பின்பு அதிகாரிகளிடம் அவித்தும் எதுவித பலனுமில்லையென இம்மக்கள் தெரிவித்தார்கள்.

அத்துடன் இக்கிராமத்தில் எந்தவிதமான ஒரு வீட்டுத்திட்டமும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இவர்களுடைய வாழ்விடங்களைப் பார்க்கும் போது உண்மையில் இவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தெளிவாகப் புலப்படுகின்றது. இது தொடர்பாக இக்கிராமத்தின் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் க.இராசமாணிக்கம் அவர்களிடம் கேட்ட போது, இங்கு அனைவருமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள்தான் 152 குடும்பத்தில் 128 குடும்பத்திற்கு சமூர்த்தி நிவாரணமுத்திரை வழங்கப்படுகின்றது என்றும் இம்மக்கள் யுத்தசூழ்நிலையில் நன்கு பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இராணுவத்தினால் சுடப்பட்டவர்கள் 15 பேரும், இராணுவத்தின் திட்டமிட்ட கொலையினால் 13 விதவைகளும், தாய், தந்தை இல்லாமல் மூன்று சிறுவர்கள் அனாதையாகவும் முற்றுமுழுதாக இயங்க முடியாமல் அங்கவீனமுற்று இராணு வெடியினால் மூன்று பேர் இருப்பதாகவும் மேற்படி கிராமம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை நாம் இக்கிராமத்திலுள்ள பாடசாலையான அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எஸ்.சுகுமார் அவர்களிடம் கேட்டோம். உண்மையில் பாடசாலை மாணவர்களின் நிலைமை மனவேதனையளித்தது. உதாரணமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் போது மயக்கமடைவதாகவும் இது தொடர்பாக ஆராய்த வேளை மாணவர்கள் காலை உணவின்றி வீட்டில் உள்ள வறுமைநிலை காரணமாகவே மாணவர்கள் பெரும் பாலனோர் வருவதாகவும் தெரிவித்த அதிபர் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக தெரிவிக்கையில்:- பத்து வருடகாலமாக நாற்காலி இல்லாமல் மாணவர்கள் தரையிலே இருந்துவருகின்றனர். சுமார் 136 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 9ம் தரம் வரை வகுப்புக்கள் உள்ளது என்றும், ஐந்து நிரந்தர ஆசிரியர்கள் உள்ளார்கள் எனவும், 11 ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு தேவையெனவும் கட்டடவசதி மிகமிகக் குறைவாகவும், ஐந்து வகுப்புக்கள் நடாத்த கட்டடவசதி தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அதிபர்.

மாணவர்களுக்கான சலகூட வசதி இல்லாததால் பெண்மாணவிகள் வகுப்பு நடைபெறும் வேளையில் சலம் கழிப்பதற்காக தங்களது வீடுகளுக்குச் சென்றே சலம் கழித்து மீண்டும் வகுப்புக்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் ஆசிரியர்கள் தங்கி நின்றே வகுப்பு நடாத்துகின்றனர். இருந்தும் ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதி இல்லாமல் மாணவர்கள் கல்விகற்கும் வகுப்பறைகளில் தங்குவதைக் காணமுடிகின்றது. இதேவேளை விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணம், பாடசாலைத் தளபாட வசதிகள் இப்பாடசாலையில் பெரும் குறையாகவும் அத்துடன் கட்டட வசதி இல்லாமையினால் மரநிழல்களில் வகுப்புக்கள் நடாத்தவேண்டிய நிலையும் இருக்கின்றது. இவற்றுடன் இங்கே விசேடமாக மாணவர்கள் குண்டெறிதல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு கருங்கல்லைக் கொண்டு குண்டெறிவதையும், உயரம் பாய்தல் நிகழ்வுக்கு கம்புகளையும் பயன்படுத்தி உயரம் பாய்வதையும் காணமுடிந்தது. இருந்தும் இம்மாணவர்கள் வாகரைப்பிரதேச மட்டத்தில் விளையாட்டு நிகழ்வில் விசேட பெறுபேறுகளை பெற்று வருகிறார்கள்.

இது இவ்வாறிருக்க மாணவர்களுக்கான கட்டாய போசாக்கு வழங்கும் திட்டம் இப்பாடசாலையில் தேவையெனவும் தெரிவத்த அதிபர் ஆசிரியர்களுக்கான கஸ்டப்பிரதேசக் கொடுப்பனவும் இங்கு வழங்கப்படுவதில்லையெனவும் தெரிவித்தார்.
Reply


Messages In This Thread
அவல நிலை - by sethu - 06-18-2003, 05:48 PM
[No subject] - by sethu - 06-19-2003, 05:50 PM
[No subject] - by sethu - 06-19-2003, 07:02 PM
[No subject] - by sethu - 06-25-2003, 09:11 PM
[No subject] - by sethu - 07-09-2003, 12:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)