07-31-2004, 08:58 PM
இலங்கை வான் பரப்பில் இராணுவ விமானங்கள் அடிக்கடி விழுந்து நொருங்குவதற்கும், அண்மையி;ல் பிரதி இராணுவ அமைச்சர் ஏவிய சமாதான வெண்புறா நிலத்தில் வீழ்ந்து இறந்ததுக்கும் தொடர்பு இருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்த வெள்ளைப் புறாவிற்கு இறக்கை மாற்றுச்சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும், இந்த ஊழலில் முன்னாள் பிரதி இராணுவ அமைச்சரின் மகன்மாருக்கு தொடர்பு இருப்பதாகவும் விமானப்படை வட்டாரங்கள் மிகுந்த மனவருத்தத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

