07-31-2004, 02:04 PM
vennila Wrote:[quote=tamilini]மலர் மரத்தில இருப்பது தானே அழகு...!
<b>அது தமிழினி அக்கா உங்களுக்குப் புரிகிறது.
ஆனால் குருவிகள் அதை நாசம் செய்வதாக முறைப்பாடு வந்திருக்கின்றதே.</b>
tamilini Wrote:Quote:அது தமிழினி அக்கா உங்களுக்குப் புரிகிறது.அப்படியா செய்தி....!
ஆனால் குருவிகள் அதை நாசம் செய்வதாக முறைப்பாடு வந்திருக்கின்றதே.
_________________
என்ன குருவிகள்... நாசம் என்றெல்லாம் பறையிறீங்க... ஸ்பரிசமே இல்லாமல் எப்படியாம் பறிப்பது... மலரிலும் மென்மையான எம் இறகுகுகள் மலர்களை நாசம் பண்ணிதாமோ.... என்று சிட்டிக்குச் சொல்லி இருப்பது குருவிகளுக்கு கோபத்தை உண்டாக்கவல்லது...!
மலர் தன் காலம் கழிய
காற்றடிக்க உதிர்த்து விழ
களித்திருக்கு மரம் - பின்
புது மொட்டுக்காய்
மோக்கிக்கும் கிளையோடு
கிளையும் குழவிகளாய்
பெற்றெடுக்கும் ஆயிரம்
மலர்கள்
மீண்டும் மரம் பொலிவு பெற...!
இதுகண்டு...
மலரும் நினைக்குது
மரம் தான் கதியென்று
உண்மை அதுவல்ல...!
மரத்தோடு மலடாய் மலரிருக்க
மலரதன் மாண்பினை இயம்பிடும்
கனியாய் அதன் பருவம் மாற
குருவி பறக்குது
ஸ்பரிசம் இன்றியே
மகரந்தம் சிந்திச் சினையாட....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

