07-30-2004, 08:46 PM
காரில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை பொலிசார் நிறுத்தி வேகமாகச்சென்றதற்கு அபராதம் கட்டச்சொன்னார்கள். அவள் கட்ட மறுக்க அவளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அங்கும் அவள் பணங்கட்ட மறுத்ததோடு பொலிசார் வைத்திருந்கும் வேகத்தை அளக்கும் கருவியில் பிழை உள்ளது எனகூறி அதை பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். நீதிபதியும் அதற்கு உத்தரவிட்டார். அந்த வேகத்தை அளக்கும் கருவி நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது நீதிபதி முன் அது சோதனை செய்யப்பட்டது. வெறுமனே அமர்ந்திருந்த நீதிபதியை அது 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாகக்காட்டியது.


