07-30-2004, 02:36 PM
விதார் ஹெல்கிசன் - பாலசிங்கம் சந்திப்பு
நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வீதார் ஹெல்கீசன் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
இலண்டனில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் இலங்கைக்கான நோர்வேயின் உயர்ஸ்தானிகர் ஹான்ஸ் பிரஸ்கரும் கலந்து கொள்ளவுள்ளதாக ஐ.பி.சி.க்கு கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்புக் குறித்து இவர்கள் அன்ரன் பாலசிங்கத்துக்கு எடுத்துக் கூறவுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட இரண்டரை ஆண்டு காலத்தில் சமாதான நடவடிக்கைகள் தற்போது மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள வீதார் ஹெல்கீசன், இந்தச் சிக்கலான சூழ்நிலையால் தாங்கள் மிகக் குழப்பமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதில் பற்றுறுதியுடன் உள்ள போதும், சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதுடன், இருதரப்பினர் மத்தியிலுமான நம்பிக்கை குறைவடைந்து, வன்செயல்கள் மேலோங்கி வருவதாக வீதார் ஹெல்கீசன் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>