07-16-2003, 07:32 PM
கடந்த மாதம் 9ஆம் திகதி தந்தையான பஞ்சாட்சரம் சிறீகாந்தன் என்பவரி னால் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் 15வயதுச் சிறுவன் சிறீகாந்தன் தயாளனின் மரண விசாரணை நேற்றுமுன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் இடம்பெற்றது.மானிப்பாய் பொலீஸார் சாட்சியங்களை நெறிப்படுத்தி நீதி மன்றின்முன் ஆஜர் செய்தனர். அப்போது இறந்தவரின் 14வயதுச் சகோதரி தொடர்ந்து சாட்சியமளிக்கும்போது கூறியதாவது:-
~இறைச்சிக்காக மாடுகளை வாங்கிவிற்கும் தொழிலை அப்பா மேற்கொண்டு வந்தார். நாளாந்தம் அவர் குடித்துவிட்டே வீட்டுக்கு வருவார். நாங்கள் கோப்பாயில் குடியிருந்தோம். பிறகு ஆனைக் கோட்டையில் நிரந்தரமாக குடியிருக்க வந்து குடியிருக்கின்றோம்.~~எங்களுடன் சொந்தம் எதுவும் இல்லாத ஒருபெண்ணையும் எங்கள் வீட்டில் அப்பா கொண்டுவந்து இருத்தியிருந்தார். இவருடன் மிகவும் அன்பாக அப்பா பழகுவார். அவரையும் அம்மாவைப் போன்றே நடத்துவார்.
~~இந்தப் பெண்ணுக்கும் அம்மாவுக்கும் இடையில் அடிக்கடி சண்டை வரும். பிறகு அம்மா அப்பெண்ணை வீட்டிலிருந்து துரத்திவிட்டார். அதன்பின் அப்பா வீட்டிற்கு வந்து ஒவ் வொரு நாளும் சண்டை பிடிப்பார்.~~அப்பாவை கடந்த மாதம் 7ஆம் திகதி பொலீஸார் வீட் டிற்கு வந்து பிடித்துச்சென்றனர். அதன்பின்னர்தான் வீட்டில் இருந்து சென்ற பெண் காரணமாக அப்பா கோப்பாயில் சண்டை பிடித்துள்ளதாக எனக்குத் தெரியும். நீதிமன்றில் இருந்து அப்பாவை அம்மாவே பிணை எடுத்தார்.
~~அம்மாவுடன் எமது உறவினர்களான செல்வராசா, சந்திரன், சீலன் ஆகியோரும் நீதிமன்றுக்குச் சென்றிருந்தனர். ஆனால், அம்மாதான் முதலில் வீட்டுக்கு வந்தார். பிறகுதான் அப்பாவும் ஏனையவர்களும் வீட்டுக்கு வந்தனர்.~~வீட்டிற்கு வரும்போதே வெறியில் வந்த அப்பா, ~எல்லோ ரும் இருங்கோ வெட்டுகின்றேன்| என்று கூறிக்கொண்டே வந் தார். அப்போது இறந்துபோன அண்ணா வீட்டின் வெளியில் நின்றார்.~~வீட்டுக் கூரையில் மீன் வெட்டும் கத்தி ஒன்றை அப்பா ஒளித்து வைத்திருப்பார். அக்கத்தியை எடுத்துக்கொண்டு அண்ணாவைப் பிடித்துவிட்டார். நாங்கள் கத்திக்கொண்டு ஓடி வந்தோம்.~~அப்போது அப்பா அண்ணாவைக் கத்தியால் பிடரிப்பக்கம் அடிப்பதைக் கண்டேன். நாங்கள் எல்லோரும் பயத்தில் மாமி வீட்டை ஓடிவிட்டோம். பிறகு மாமா வந்து கூறிய பின்னர்தான் அண்ணா வெட்டப்பட்ட இடத்திற்கு வந்தோம்|| - எனவும் குறிப் பிட்டார்.
[size=9]நன்றி உதயன்
இந்த ஆணாதிக்கமிருக்கே.. அது சொல்லி மாளாது