Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க கழுக்கு தடையாக நிற்க்கும் தமிழரும் புலிகளும்
#4
<span style='color:red'>ஐ.நா. ஆணைக்குழு முன் சிறீலங்கா மீது கடும் விமர்சனம்

நேற்று (27.07.04) ஐ.நா மனித உரிமைகள் உப ஆணைக்குழுவின் 56வது கூட்டத்தொடரின் முன் சிறீலங்கா எதிர்பாராத கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு நடைமுறை சீர்குலைந்துவி;ட்டது எனவும், உடனடியாக ஐ.நா. மனித உரிமைகள் உப ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட வேண்டும் எனவும் நேற்றைய அமர்வில் உரையாற்றிய இரு பிரதான ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த 26.07.04 திங்கள் முதல் nஐனீவாவில் ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான உப ஆணைக்குழுவின் 56வது அமர்வு ஆரம்பமானது.

அனைத்துலக நாடுகளில் இருந்து தேர்வான சர்வதேச மனித உரிமைகள் நிபுணர்களை உறுப்பினர்களாகவும், அனைத்து நாடுகளையும் ஐ.நா அங்கீகாரம் பெற்ற சர்வதேச நிறுவனங்களையும் அவதானிகளாகவும் கொண்டு ஆரம்பமான இந்தக் கூட்டத்தொடரானது ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கொள்கை உருவாக்கல் நெறிமுறைகளின் கீழ் செயற்படுகின்றது. இந்த கூட்டத்தொடரின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த கல்விமானும் நிபுணருமான ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ் உப ஆணைக்குழு முன் சிறீலங்காவின் சட்ட ஒழுங்கு நடைமுறை தொடர்பாக ஆசிய சட்ட வள நிறுவனம் சமர்ப்பித்த விரிவான அறிக்கை சிறீலங்கா மீதான இன்றைய கடும் விமர்சனங்களிற்கு வழிசமைத்தது. இவ்வறிக்கையானது எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும், பார்வையாளர்களாக பங்கேற்ற நாடுகளிற்கும் ஐ.நா பணிமனையால் விநியோகிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வறிக்கையினை மனித உரிமைகள் உப ஆணைக்குழு தனது தற்போதைய விதிமுறைகளுக்குட்பட்டு தனித்துவமாகப் பரிசீலிப்பதை தவிர்த்துவருகின்றது.

இதனை விவாதிக்க விடாது தவிர்ப்பதற்கான இராஐதந்திர நகர்வுகளை சிறீலங்கா மேற்கொண்டதாக உப ஆணைக்குழுவில் பங்கேற்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் கருதின. இதனால் இன்று நாடுகள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற இரு சர்வதேச நிறுவனங்கள் இவ்விவகாரத்தை கையிலெடுத்தன.

இவ்விடயம் தொடர்பாக உரையாற்றிய ஆசிய சட்டவள நிறுவனத்தின் ஐ.நாவிற்கான பிரதிநிதி சிறீலங்காவின் சட்ட அமுலாக்கல் நிலவரத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் தொடர்பான அச்சத்தை வெளியிட்டார். அரசியல் அழுத்தம் மற்றும் பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களே தொடர்ந்தும் அடக்குமுறைக்குட்பட்டு பாதிக்கப்படும் ஆபத்தான சூழல் அங்கு எழுந்துள்ளதற்கான ஆதாரங்களை முன்வைத்தார். எனவே உடனடியாக ஐ.நா மனித உரிமைகள் உப ஆணைக்குழு சிறீலங்கா நிலையை கருத்தில் எடுத்து இதனை ஆராய்வதற்கான வழிகளை முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இவரிற்கு முன்னர் பேசிய மக்களின் உரிமைக்கும் விடுதலைக்குமான சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி வொPனா கிராவ் அவர்கள் சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு நிலை படிப்படியாக அரசியல் மயப்படுத்தப்பட்டு, இராணுவ மயப்படுத்தப்பட்டு இன்று சீரழிந்துவருகின்றது எனச்சாடினாhர். செம்மணி உட்பட பல கோரமான விவகாரங்களை அவர் இதற்காகப் பட்டியலிட்டு மிக தாக்கமான உரையினை ஆற்றினார். பல உலக நாடுகளின் பிரதிநிதிகளும், சர்வதேச மனித உரிமைகள் நிபுணர்களும் அவரது உரையினை கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். இது சிறீலங்காவிற்கு எதிரான கடும் விமர்சனமான அமைந்திருந்தது.

ஆணைக்குழுமுன் உரையாற்றிய இன்ரர் பேத் இன்ரர்நசனல் எனும் சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதி கலாநிதி சால்ஸ் கிராவ் அவர்கள் புலிகள் மிக வெளிப்படையான முறையில் இணக்கப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்கையில் சிறீலங்கா சனாதிபதி அமைச்சர்களை து}க்கியெறிந்தும், பாரளுமன்றத்தைக் கலைத்தும் இணக்கச் சூழலைக் குழப்புகின்றார் என சுட்டிக்காட்டினார். சமாதானச் சூழல் நிலவிய போதும் எதுவித பொருண்மிய முன்னேற்றங்களும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் எவ்வளவு காலம் பொறுமையாக இருப்பார்கள் என்கின்ற கேள்வி பெரிதாக எழும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

திங்களன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமான ஆணைக்குழுத் தொடரில் நேற்று செவ்வாயன்றுதான் முதன் முதலாக பகிரங்கக் கருத்துரைகள் ஆரம்பமாகின. இன்றைய தினமே சிறீலங்கா கடும் விமர்சனங்களுக்கும், அவதானிப்புக்குள்ளானமை சிறீலங்கா இராஐதந்திரிகளால் எதிர்பார்க்கப்படாத ஒன்று எனக் கருதப்படுகின்றது.

இவ்வாணைக்குழுவிடம் தமிழ் மக்களின் பொருண்மிய சமூக கலாச்சார உரிமைகள் தொடர்பான மனுவொன்றை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது. இம்மனுவானது இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளை சிறீலங்கா தொடர்ந்தும் நிராகரிப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.

1975ல் உருவாக்கப்பட்டு சிறீலங்காவும் கைச்சாத்திட்டுள்ள பொருண்மிய சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் தமிழ் மக்கள் தமக்கான நிர்வாக அமைப்பைப் பெறும் உரிமைகள் கொண்டவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகவலை, தற்போது ஜெனீவாவிலுள்ள சுவிஸ் சர்வதேச ஊடகத் தொடர்பாளர் புதினத்திற்குத் தெரிவித்துள்ளார். </span>

நன்றி புதினம்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by தமிழன் - 07-29-2004, 08:07 PM
[No subject] - by Mathivathanan - 07-29-2004, 08:32 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 08:38 PM
[No subject] - by Mathivathanan - 07-29-2004, 08:58 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 09:02 PM
[No subject] - by Mathivathanan - 07-29-2004, 09:09 PM
[No subject] - by kuruvikal - 07-29-2004, 09:12 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 09:17 PM
[No subject] - by Mathivathanan - 07-29-2004, 09:28 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 09:51 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 10:05 PM
[No subject] - by Mathivathanan - 07-29-2004, 10:06 PM
[No subject] - by tamilini - 07-29-2004, 10:11 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 10:14 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 10:19 PM
[No subject] - by Mathivathanan - 07-29-2004, 10:30 PM
[No subject] - by Mathivathanan - 07-30-2004, 12:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)