07-29-2004, 06:56 PM
Quote:நேசம் என்றும் எம்மை
தனக்கே உதாரணமாய்க் கொள்ள வேண்டும்
அதற்காய் கட்டினேன் இந்த மகால்
பளிங்கு கொண்டல்ல
என் இதயச் சுவர் கொண்டு....!
மலரே இது உனக்கும்
காட்சியாய்த்தான் தெரியும்
ஆனால் பூங்குருவி நான் உணர்வேன்
என் தாஜ்மகாலில் நின்
கனதி....!
<b>உனக்கொரு தாஜ்மஹால்
கட்ட என்னால் முடியாது
வசதியில்லை எனபதல்ல
உயிர் போனபின்பு
உனக்கொரு மாளிகை
கட்டுவதில் எனக்கு
உடன்பாடில்லை.
வாழும்போது வாய்ப்பது
குடிசைதான் என்றாலும்
அங்குதான் நிம்மதி நிறைய உண்டு
ஆசையிருந்தால் வா
வாழ்ந்து பார்ப்போம்.</b>
----------

