07-29-2004, 03:41 PM
பேச்சுக்களுக்கு அரசு தயார்: அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் மங்கள சமரவீர
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தேவையும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளதென இங்கு தெரிவித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, எந்த நேரத்திலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான நெகிழ்வுப் போக்குடன் செயற்பட வேண்டும் எனவும், வடக்கிலும், தெற்கிலும் இடம்பெறும் கொலைகளைத் தடுத்து தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>