Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ். பல்கலைக்கழகம் பற்றிய அலசல்கள்
#6
<b><span style='font-size:25pt;line-height:100%'>தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்ட மருத்துவ பீடமாணவியின் சகோதரன் சூரியன் இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்த கடிதம் </b></span>
<b>
<span style='font-size:30pt;line-height:100%'>கடிதத்தினை வாசிக்க முன்பு சிலவற்றை சிந்தியுங்கள், விடைகளை காண முற்படுங்கள்.</span>
[b]
"பீடாதிபதியால் வரையப்பட்ட அறிக்கையானது மிகவும் கீழ்த்தரமானதும் மற்றவர்களை ஏமாற்றும் விதத்திலும் பிழைகளை மூடிமறைக்கும் வகையில் திட்டமிட்டு வரையப்பட்ட தொன்றாகும். .."
இலகுவாக தீர்க்க கூடிய பிரச்சனையை பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ?

குடாநாட்டு மக்களை போர் அழிக்க, கலாசாரம் சீர்ரழிக்க, ஆற்றல் உள்ள மாணவர்களை வைத்திய கலாநிதிகளாக வருவதைத்தடுப்பதன் மூலமாக நோயும் தமிழர்களை அழிக்குமா ?

வெளிநாடுகளில் பல புலம்பெயர்ந்த நம்மவர்கள் புகழ்பூத்த வைத்தியர்களா இருக்கும் வேளையிலும், இலங்கையிலேயே முதன் முதலாக உயிர்நுட்பு (BIT TEC) என்ற அமைப்பு உருவாக்கி பல கண்டுபிடிப்புகள் செய்த வைத்திய கலாநிதிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதும், அண்மைக்காலமாக எம்மவர்களில் உலகம் புகழும் வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவராதது ஏன் ?

பல்கலைக்கழக ஊழியர்போராட்டம்...., வவுனியா வளாக மாணவர்கள் போராட்டம்......., உடற்கல்வி டிப்புளோமா மாணவர்கள் பகிஸ்கரிப்பு............, மருத்துவபீட மாணவியும் சகோதரனும் சாகும் வரை உண்ணாவிரத்பபோர்... இது தான் அண்மைக்காலமாக செய்தி ஊடகங்களில் காணப்படும் தலையங்கங்கள்

இதைத்தான் எதிரி பார்க்க ஆசைப்பட்டானா ? அதற்காக நம்மில் சிலரைப்பயன்படுத்தி
இவ்வளவு அனர்த்தங்களையும் ஆரம்பித்து வைத்தானா ?

எல்லா அனர்த்தங்களுக்கும் தெரிந்தொ தெரியாமலோ தொடர்ந்தும் நம்மவர்களும் துணைபோவார்களா ?

எல்லாப்பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என்ன ?

தமிழர்கள் சுதந்திரமாக தனிநாட்டில் வாழப்போவது யாருக்கும் பிடிக்கவில்லையா ?

இன்னும் வெளியே தெரியாமல் உள்ள தரவுகள் ......

யாழ்ப்பாணத்தின் வடமராச்சிப்பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு வகைப்பூரானின் (வெள்ளைப்பூரான்) கடியால் ஏற்படும் மரணத்திற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கமுடியாமையால் பலர் ஒவ்வொருவருடமும் இறக்கிறார்கள். இது பற்றி இன்னும் மருத்துவபீடத்தில் ஆராச்சிகள் மேற்கொள்ளப்படாதது ஏன்?

பல நோயாளிகள் சரியாக நோய் இனம் காண்பதற்கு முன்பே இறந்து போகின்றார்கள். (மூன்று வருடங்களுக்கு முன்பு என்னுடைய பெரியப்பாவின் மகள், இரண்டு சின்னஞ்சிறுசுகளின் தாய் நோய் சரியாக அறியப்படாமலே இறந்து போனார்)

வெளிநாட்டவர்களால் நன்கொடையாக கொடுக்கப்பட்ட பல வைத்தியக்கருவிகள் இன்னும் பயன்படுத்தப்படாமலும், சிலவற்றின் உச்சப்பயன் அடையாமல் இன்னும் வைத்தியசாலையில் தூங்கிவழிகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையின் இரத்தம் சோதனைக்காக எடுக்கப்பட்டு பத்து தினங்களுக்கு மேலாகியும் அறிக்கை வராத காரணத்தினால், என்னுடைய அப்பாவி நண்பன் தனது தொழிலையும் விட்டு அல்லும் பகலும் வைத்தியசாலை நோக்கி திரிந்து விசாரித்த போது, பரிசோதனைக்கு கொண்டு சென்ற இரத்தம் தொலைந்து போனது தெரியவந்தது. இவ்விடயம் தெரியாமல் காலம் கழித்த வைத்திய சமூகம் இன்னும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டிருக்கையில்...

நோயாளிகளுடன் அன்பாக கதைத்துப்பேசி அவர்களுக்கு நோய்பற்றி எதையுமே புரியவைக்கமல் கல்வியறிவு குறைந்த அப்பாவிமக்களை பேசித்தீர்க்கும் சில வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை...

எதற்கெடுத்தாலும் போரை காரணம் காட்டி தப்பித்துக்கொண்டு போருக்கு மத்தியில் தங்களது சொந்த நலன்களில் மட்டுமே அதிஅக்கறையாக சுகபோகம் அனுபவித்த வைத்தியர்கள் இருக்கும் வரை....

பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணித்தாயுடன் பாலியல் சேட்டை செய்தமைக்காக தண்டிக்கப்படவிருந்த வைத்தியர் ஒருவரை காப்பாற்றும் வைத்தியகலாநிதிகள் இருக்கும் வரை....

தன்னிடம் உள்ள வித்தையைக்காட்டி பிழைப்பு நடத்தும் வைத்தியர்கள் இருக்கும் வரை.....

புஸ்பமாலா போன்ற மாணவியருக்கு மட்டுமல்ல, யாருக்குமே இந்த மண்ணில் நியாயம் கிடைக்காது என்பது உண்மை ஆனாலும் இவற்றை எல்லாவற்றையும் என்னுடைய பேனா எழுதும்..... இவ்வளவு காலமும் ஊடகங்களின் அனுசரணையுடன், தமக்கு இருக்கின்ற போலியான சமூக அந்தஸ்தினை வைத்து சமூகத்தினை ஏமாற்றியவர்கள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படுவார்கள். என்னுடைய வீட்டிற்கு கல்எறிவிழலாம், எனக்கு எதிராக முறைப்பாடுகள் நடக்கலாம், கைகூலிகளைக்கொண்டு தங்களுடைய இராச்சியத்தைப்பலப்படுத்த என்னைக்கொல்லாம். நிரந்தமில்லாத உடல் அழிவதை யாரும் தடுக்கமுடியாது. அதனால் எனது போனா இன்னும் எழுதும்.


மாணவி ஒருவர் நீதி கேட்டதால் அனைவருக்கும் நீதி கிடைக்கும் காலமிது. செல்வி புஸ்பமாலாவின் தற்துணிவாலும் அவருக்கு நீதிகிடைக்கவேண்டும் என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பாடுபடும் அவரது குடும்பதாருக்கும் ஈழத்தில் நீதி கிடைக்கவேண்டும், அவருடைய போராட்டம் வெற்றிபெறும் நேரத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறாது மாணவர்கள் சமூகமும், தமிழரின் சுதந்திரமான ஆரோக்கியமான சமூக வாழ்வில் அக்கறையுள்ளவர்களும் தொடர்ந்தும் தமிழ் மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். வெறும் சுயநலங்களுக்காகவும், வரட்டுக்கௌரவங்களுக்காகவும், அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உரியநேரத்தில் வெளிக்கொண்டுவரப்படடு அதற்கான பரிகாரம் தேடப்படவேண்டும்.

விடுதலையின் உயிர்நாதமாகிய தமிழரின் கல்வியை, கலாசாரத்தை அழிப்பதால் மட்டுமே தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை அழிக்கமுடியும் எனக்கனவு காண்பவர்களின் கண்முன்னாலேயே தமிழ் இனம் தடைகள் தகர்த்து தலைநிமிர்ந்து வாழ்தலே எதிரிக்கு கொடுக்கும் சரியான பதிலடி.

தற்துணிவான புஸ்பமாலா என்ற மாணவி மட்டுமே தனது எதிர்காலத்தில் பல வகையாலும் பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் அதற்கான மாற்றுவழிகளோடு நிர்வாகத்திற்கு எதிராக நியாயம் கேட்க முன்வந்தார். ஆனால் இன்னும் எத்தனையோ மாணவ மாணவிகளின் கல்வி திட்மிட்டு அழிக்கப்பட்ட வரலாறு (மற்றய கல்விப்பீடங்களிலும்) ஆதார பூர்வமாக விரைவில் வெளிவரும்.

நன்கு திட்டமிட்ட வாழ்க்கை முறையைக்கொண்டு பல நூற்றாண்டுகளாக இப்பூமியில் வாழ்ந்து, பல அரிய சாதனைகளை நிகழ்த்தியது எம்மினம். எங்கள் மூதாதையர்களின் பொக்கிசங்களான ஒளவையார், திருவள்ளுவர் கூறிய சமூகநீதிகள் இன்னும் எங்கள் சிந்தனைகளில், செயற்பாடுகளில் இருப்பதை நாம் எவரும் மறுக்கமுடியாது.

நோய் இல்லாமல் வாழ்வதற்கு எத்தனையோ வழிவகைகளைச்சொல்லிய எம் சான்றோர் காலமாற்றத்தால் நோய்வந்தால் அதனை வெறும் மனிதர்களால் தீர்த்துக்கொள்ளாமல் சித்தர்களாலேயே தீர்த்துக்கொண்டார்கள். எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்த இனம், தெளிவான வாழ்க்ககை வாழ்ந்த இனம் ஏன் சித்தமருத்துவத்தை மட்டும் வாய்மொழியாகவோ இல்லது பரம்பரை பரம்பரையாகவே ஒருவருக்கு ஒருவர் கூறிவந்தார்கள் சிலவற்றை இலகுவில் சாதாரண மக்களால் விளங்கிக்கொள்ள முடியாதவாறான சொற்களைப்பிரயோகித்து பாடல்களாக எழுதிவைத்தார்கள். (இருக்கின்ற சித்தர் மருத்துவ நூல்கள் இப்போதுள்ளவர்களால் விளங்கிக்கொள்ள முடியாமல் பிழையான விளக்கங்களுடன் சித்த மருத்துவம் உலாவி வருவது வேறு விடயம்) என்று சிந்தித்தால் இன்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடந்துகொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களுக்கு விடைகிடைக்கும்.

தன்னுடைய குருவோடு உடனிருந்து அல்லும் பகலும் மக்களுக்கு சேவை செய்து பக்குவப்பட்ட ஒருவனுக்கே குருவானவர் எல்லாவித்தைகளையும் கற்றுக்கொடுப்பது இப்போதும் சிலருடைய கல்விமுறையில் காணலாம். புராணக்கதைகளில் கூட இதனை நாம் அவதானிக்கலாம் அதாவது துரோணாச்சாரியார் தன்னிடம் வில்வித்தை பயின்ற அர்சுனனுக்கு மட்டுமே அம்புகளால் ஆயிரம் துளையிடும் வித்தையைக்கற்றுக்கொடுத்தார். இருப்பினும் ஏகலைவன் என்னும் வேட்டுவச்சிறுவன் துரோணாச்சரியாரை மானசீக குருவாக கொண்டு வில்வித்தையை காட்டில் இருந்து தனியாகவே கற்றுக்கொண்டான். இவை இவ்வாறு இருக்க துரோணாச்சரியாரும் மாணவர்களும் காட்டிற்கு பயிற்சி எடுக்க சென்றவேளை ஒரு நாய் அம்பினால் ஆயிரம் துளையிட்டபடி இறந்து கிடந்த போது, நிலைமையை உணர்ந்த துரோணாச்சரியார் ஏகலைவனைச்சந்தித்தார்.

ஏகலைவன் தனது மானசீக குருவை நேரில் சந்தித்தான் அத்தோடு நில்லாமல் குருதட்சணை கொடுக்க முன்வருகின்றான், அவனிடம் துரோணாச்சரியார் அவனுடைய கட்டைவிரலைக்கேட்கின்றார். (கட்டை விரல் இல்லாத கையினால் வில்லில் நாண் ஏற்ற முடியாது) ஏகலைவன் மனமுவந்து தனது கட்டைவிரலை கொடுக்கின்றான். இந்த இடத்தில் ஏன் துரோணாச்சாரியார் கட்டைவிரலைப்பெற்றுக்கொண்டார் என்ற சிந்தித்தால் வித்தை சரியான இடத்திலேயே இருக்கவேண்டும். இருக்குமிடத்தில் இல்லாமல் வேறெரு இடத்தில் இருந்தால் சுமூகமான சமூகவாழ்வு என்பது கேள்விக்குறியே! (இன்றைய அரசியல் மிகப்பொருத்தமான உதாரணம்)

தமிழர்களின் நோய்நொடிகள் சித்தர்களால் மட்டுமே முன்பு குணப்படுத்தப்பட்டன. பின்னர் நடந்த காலமாற்றம், ஆட்சி மாற்றம், கல்விமுறைமாற்றம் தமிழரின் சமூக ஒழுங்கை சீரழித்து விட்டது. அதன் விளைவை எங்களது வாழ்வில் பல துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். பிறர் நலனில் அக்கறையில்லாதவர்களிடம்; ஆட்சி, அதிகாரம், ஊடகம் எனப்பட்டியல் நீழுகின்றது...

இந்தவகையில் பிழையானவர்களிடம் நிர்வாகம் சென்றால் சிலவற்றை நாம் தவிர்க்கமுடியாமல் அனுபவிக்க வேண்டிவருகின்றது. ஆனாலும் எந்த வித தன்னமில்லாமல் தமிழரின் வாழ்வின் விடிவிற்காய் தம்மை அர்பணித்த மாவீரர்களின் ஆன்மாக்கள் இன்னும் பல உண்மைகளை உலகிற்கு உணர்த்தும். </b>

இனி கடிதத்தை முழுமையாக படியுங்கள், தனிஒருவரின் மனக்குமுறல்களாக எண்ணாமல் பிரச்சனையின் நியாயப்பாட்டினை உணருங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உரியவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்.

கி. மகிந்தகுமார்,
இல. 28, துரைராசா வீதி,
வண்ணார்பண்னை,
யாழ்ப்பாணம்.
20. 07. 2004.

மருத்துவபீடாதிபதி மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி க. சிவபாலன் அவர்களால் 13.07.2004. அன்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக.

மருத்துவபீட நிர்வாகத்தால் திட்டமிட்டரீதியில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டமையால் தனக்கு நீதிகிடைக்கவேண்டுமெனக்கோரி எனது சகோதரியாகிய கி. புஸ்பமாலாவும் நானும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்ததும் அதற்கான நீதிகிடைக்கப்படல் வேண்டுமென்ற நோக்கில் விசாரணைக்குழு அமைத்ததும் தெரிந்தவையே.

பீடாதிபதியால் வரையப்பட்ட அறிக்கையானது மிகவும் கீழ்த்தரமானதும் மற்றவர்களை ஏமாற்றும் விதத்திலும் பிழைகளை மூடிமறைக்கும் வகையில் திட்டமிட்டு வரையப்பட்ட தொன்றாகும். இதற்கான பதிலறிக்கையை எங்களுக்கான உண்மைத்தன்மையான முடிவு வெளிவந்ததும் இவர்களின் பொய்யான முகத்திரையை கிழித்தெறிய எண்ணியிருந்தோம். ஆனால் அம்முடிவு கிடைப்பதற்கு காலதாமதமாகுவதால் எங்களது பதிலறிக்கையை தற்பொழுது வெளியிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளோம்.

அதாவது எனது சகோதரிமீது மிகவும் கரிசனையுடையவர்கள் போல் காட்டமுயலும் மருத்துவபீட நிர்வாகம் இப்பிரச்சனை தொடர்பாக எனது சகோதரியும் நாங்களும் பலவருடங்களாக சரியானதொரு தீர்வை பெற்றுக் கொள்ள நாடியபோதும் மனிதாபிமானம் எதுவுமற்ற முறையில் பலதடவைகள் நடந்து கொண்டார்கள். இது நீடித்து மனிதவுரிமைகள் ஆணைக்குழுவரை சென்று உண்ணாவிரதம் இருக்கும் வரை எங்கேபோனது இந்தக் கரிசனை?

உண்ணாவிரதமிருந்த வேளையில் நிர்வாக ரீதியாகவோ ஆகக் குறைந்தபட்சம் மனிதாபிமான ரீதியிலாவது அணுகாத ஒரு பீடாதிபதியாகிய இவர் இவ்வாறு என் சகோதரிமீது அக்கறையுள்ளவர்போல் அறிக்கைவிட்டிருப்பது மிகமிக கேலிக்குரியதாகும்.

எனது உரிமைகள் கேட்டு சென்றவேளை - நான்பட்ட அவமானங்களும், அசௌகரியங்களும் வெறும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.

இவர் பீடாதிபதியாக பொறுப்பேற்றபின் பெற்றூராகிய எங்களால் எமது பிள்ளை தொடர்பாக முதன்முறையாக அனுப்பப்பட்ட பதிவுத்தபாலானது இக்கரிசரனையுள்ள மனிதரால் உடைத்துக்கூட பார்க்காமல் நிர்வாகத்திலிருப்பவர்களுக்குரிய தபால் விதிமுறைகளையும் மதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட கடிதம் இப்பொழுதும் உடைக்கப்படாமலே எங்கள் கையில் ஆதாரமாகவுள்ளது.

துறைத்தலைவர்களையோ, மருத்துவபீடத்திலுள்ள ஏனையோர்களையோ அணுகி கதைப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் எனது சகோதரியால் அவர்களை சந்திப்பதற்கு அனுமதிகோரி எழுதப்பட்ட கடிதமானது இந்நேர்மையான அக்கறையான மனிதரினால் மறுக்கப்பட்ட நிலையில் துணைவேந்தரிற்கு அனுப்பப்பட்டது.

வெளியிடங்களிலிருந்து வந்த விரிவுரையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட பொது விரிவுரைகளில் கலந்துகொண்டு எனது சகோதரியின் அறிவு வளர்ந்துவிடுமென்று எச்சரிக்கைவிடுத்தவர்.

2003 ஆம் ஆண்டு எனது சகோதரியால் எழுதப்பட்ட பாரீட்சையில் பேராசிரியர் ஒருவரால் இந்த பீடாதிபதியின் முன்னிலையில் எனது சகோதரியின் பதிலளிப்புக்களைப் பார்த்து அறிவில் சிறந்த மாணவியென [Brilliant knowledge girl] என பாராட்டப்பட்டது பற்றி நாங்கள் நேரில்கேட்டபோது ஒரு மாணவி பலதடவைகள் வினா எழுப்பும்போது அதற்கு பதிலளிக்காமல் வரும் மாணவரைத்தான் இவ்வாறு கூறுவோம் என்று முட்டாள்தனமான பதிலை எமக்குத் தந்தவர்.

இதுபோன்ற இன்னும் பலதரப்பட்ட பொறுப்பற்ற முறையில் தரப்பட்ட பல விடையங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமாக எங்களிடம் உள்ளன.

இத்துடன் எனது சகோதிரிக்கு அறிவுரைகூறிய முன்னாள் பீடாதிபதி தொடர்பாக.

உண்ணாவிரதமிருந்த வேளையில் பத்திரிகையாளர்கள், பெற்றோர்களாகிய நாங்கள் மாணவர்கள் முன்னிலையில் எனது சகோதரியை பேசத்தக்காத வார்த்தைகள் கூறி அநாகரிகமான முறையில் நடந்தவர். தனிப்பட்டரீதியில் எவ்வாறு நடத்தியிருப்பார் என்பதை விளக்கத்தேவையில்லை.

இவற்றுடன் உண்ணாவிரதமிருந்து இரண்டு நாட்களாகியும் மனிதாபிமானத்துடனாவது அணுகி பிரச்சனைபற்றி கேட்டு அதுபற்றி தீர்மானம் எடுக்க முன்வராதவர்கள் எனது சகோதரிக்குரிய ஆக்கபூர்வமானதும் நல்லெண்ண அடிப்படையிலுமான எந்தவொரு தீர்வையுமோ பெற்றுத்தராத இவர்கள் மூன்றுவருடங்கள் கழிந்தநிலையில் அதுவும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினரின் விசாரணையின் முடிவில் சட்டரீதியான முடிவிற்காக அவர்கள் நன்நோக்கில் உடன்பட்டார்கள். இந் நன்நோக்கம் மூன்று வருடமாக அலைக்கழித்து விரட்டியடித்தபோது எங்கே போனது.

ஏற்கனவே நாங்கள் சென்று பீடாதிபதியை சந்தித்தபோது எனது சகோதரி உளரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று எழுத்துருவிலும், எங்காவது மருத்துவ சான்றிதழ் பெற்றுத்தந்தால் வேறு பல்கலைக்கழகம் மாற்றித்தருவதாக கதைவிட்டவர். இதை மனிதத்தன்மையுள்ள எவராலும் ஜீரணிக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறிய அநாகரிகமான கருத்தை இவ்வறிக்கையிலும் பொய்யான ஒரு தகவல் மூலம் திணிக்கமுயன்றுள்ளார். பிற ஆசிரியர்களில் உள்ள கோபங்களை மாணவர்கள் மீது திணித்து வெளியில் கலைப்பவாகள், பொதுஇடங்களில் கண்டகண்ட வார்த்தைகள் பேசுபவர்கள், பிறிதொரு ஆசிரியர் கற்பித்துக் கொண்டிருக்கும்போது அனுமதியின்றி உள் நுழைந்து மாணவர்களை எழுப்பி கலைப்பவர்கள் இன்னும் சொல்லப்போனால் மருத்துவபீடத்தில் பலர் உள்ளனர். அவர்கள் தான் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

எனது சகோதரி பலநூற்றுக்கணக்கான மாணவர்களிற்கு கல்விபோதித்தவர். அவருடைய மாணவர்கள் பலர் பல்கலைக்கழகத்தில் படட்ம்பெற்று வெளியேறிவிட்டார்கள். இன்னும் மாணவர்கள் பலர் கல்விகற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனது சகோதரி மீண்டும் வகுப்பு எடுக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்தின் மாயையை அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் விளங்கக்கூடியதாகவிருக்கும். ஏன் தற்போது மருத்துவபீடத்தில் கல்விகற்கும் இந்த பீடாதியின் மகனிற்கே மருத்துவக்கல்வி தொடர்பான விளக்க அறிவுரை வழங்கியவர் அவ்வாறானதொரு மாணவிக்கு வகுப்பெடுத்து அறிவுரை வழங்கவேண்டுமா? இதை அவாடகளிடமே கேட்டுப்பாருங்கள்.

அதாவது முதல் இரண்டு வருடங்களில் கற்பிக்கப்படும் மூன்று பாடங்களும் மாணவர்கள் உயர்தர பரீட்சையில் கல்விகற்றுவரும் மனித உயிரியல் (Human biology) இன் விரிவான ஒன்றே தவிர மருத்துவர்கள் ஆவதற்குரிய எந்தவொரு பயிற்சியும் அதில் வழங்கப்படுவதில்லை. இரண்டாம் வருடத்தின் பின்னரே அதற்குரிய சகல கற்பித்தலும் பயிற்சியும் தொடங்குகின்றன. எல்லோருடைய கருத்துக்களையும் கணித்தால் இதன் முழுமையான உண்மை விளங்கும். உயர்தர வகுப்பில் மனித உயிரியல் (Human biology) இல் சிறப்பாக தேர்ச்சியடைந்து மற்றைய மாணவரிற்கு அதை கற்பித்த எனது சகோதரி போன்றவர்கள் பாரியளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் இத்தடையின் காரணத்தை விளங்கிக் கொள்வீர்கள். தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் வைத்தியராவதற்குரிய எந்தவொரு பயிற்சியுமே இல்லாமல் ஒருபாடம் சித்தியடையாத மாணவர்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் வெளியில் நிறுத்தப்படுகிறார்கள். அவ் ஓரிரண்டு வருடங்களிற்குள் சித்தியடைந்த பாடங்களையும் மறந்துவிடுவார்கள். இத்தடையைக்கூறி மருத்துவபீடாதிபதியால் வரையப்பட்ட இரண்டாம் வருடத்துடன் வைத்தியராக வெளியேற்றி நோயாளரின் அக்கறையில் நலன்கொண்டு வரையப்பட்ட அறிக்கையின் மாயைத்தோற்றத்தை உணரக்கூடியதாகவிருக்கும். அப்படியான இப்போலித்தடையைத் தாண்டமுடியாமல் மருத்துவபீடத்தைவிட்டு பலபெறுமதிமிக்கவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்களானால் அது சமுதாயத்திற்கு யாழ் மருத்துவபீடத்தால் இழைக்கப்பட்ட அநீதியாகும். இது போலித்தடையைப் பயன்படுத்தியே எனது சகோதரியும் பழிவாங்கப்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு பரீட்சையானது மூன்றாவது சந்தர்ப்பமென நிரப்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பிரதி எங்கள் கைகளில் ஆதாரமாகவுண்டு. அது பீடவிதிக்குட்பட்டதும் மேலும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கக்கூடியதாக டாக்டர் சிவபாலனால் புதிதாக எழுதப்பட்ட பீடவிதிக்குள் அடங்காமையால் இலக்கத்தினடிப்படையில் வழங்கியதாக இரக்கமான உருக்கமான அறிக்கை விட்டிருக்கின்றார். எனது சகோதரியின் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இல்லாதவர் அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணப் பிரச்சினைகளோ நிர்வாகத்தில் நடந்தவை பற்றியோ பூரணவிளக்கம் இல்லாதவை இப்படி விளக்கஅறிக்கைவிட்டிருக்கின்றார் என்றால் அதை நம்புவதற்கு எல்லோரும் தயாராகவுள்ளார்கள் என்ற நப்பாசைதான் அவருக்கு.

இரண்டு வருடங்கள் கழிந்தநிலையில் மருத்துவபீடத்தால் உருவாக்கப்பட்ட எனது சகோதரியின் எடுக்க வேண்டிய இரண்டு பாடங்களின் துறைத்தலைவர்கள் உள்ளிட்ட குழுவானது கொடுக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களை கொடுப்பதற்கு அனுமதி மறுத்தநிலையில் மூதவை வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகையால் நூலகம் உட்பட எல்லாவழங்களையும் பாவிப்பதற்கு தடைவிதித்து எல்லாவற்றையும் மூதவையிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்படி எழுத்துருவிலும் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் 2001ஆம் ஆண்டு வரைதான் நூலகம் உட்பட எல்லாவளங்களும் பாவிக்கும் உரிமை இருந்ததென எழுத்துருவில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கள் கைகளில் இருக்கும்போது பீடாதிபதி அவர்களால் அறிக்கையில் அக்கறை உள்ளவர்களாக நாடகமாடியது மிகமிக கேலிக்குரியதாகும்.

அத்துடன் வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட பலவிடயங்கள் சொல்லிக் கொண்டே போனால் புத்தகமாக வரையவேண்டும். சிலர் கூறுவதுபோல் எந்தவிதமான கடிதங்களோ அனுப்பப்படாத நிலையில் அதற்கு அவர்களின் பதில்களோ இல்லாதநிலையிலும் தரப்பட்ட சில முடிவுகளிலும் பதவி முத்திரை போடுவதற்கே பயந்து அதைத் தவிர்த்தவர்கள் இப்பொழுது வீர வசனங்களைப் பேசுகின்றார்கள்.

உண்மையும், நீதியும் உள்ள நிர்வாகம் எதற்காகவும் கலங்க வேண்டிய அவசியமில்லை. எதற்காகவும் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. பல்கலைக்கழகத்தை இழுத்து மூடவேண்டிய அவசியமும் இல்லை. இதில் சம்பந்தப்படாதவர்கள் நேர்மையை வெளிக் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது பகிரங்கமாக அழுத்தம் கொடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

அப்படிச்செய்தால் அவர்களுக்கு இன்னும் பெருமையைத் தேடித்தரும். மாறாக பல்கலைக்கழகத்தை இழுத்துமூட வேண்டுமென மிரட்டுவது இன்னும் அவர்கள் மீது சந்தோசத்தைத் தோற்றுவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை நிரூபிக்கப்பட்டால் மருத்துவபீடத்திற்கு ஏற்பட்ட களங்கம் தானாகவே மறைந்துவிடும்.

ஆகவே டாக்டர் சிவபாலனால் தெரிவிக்கப்பட்ட விளக்கங்களிலிருந்து பேரசிரியர் குணாநந்தம் அவர்கள்தான் இதுவரையில் பரீட்சையில் பழிவாங்கிக் கொண்டிருந்தார். அதனால்தான் அவரை இனம்கண்டு வெளியேற்றிவிட்டோம் என்பதாகும். ஆகவே மருத்துவபீடத்திலும் பழிவாங்கல் இருந்திருக்கின்றதை ஏற்றுக் கொள்கின்றார். இன்னும் இருக்கும் தேடிப்பாருங்கள். ஆனால் துரத்தாதீர்கள். ஏனெனில் மருத்துவபீடத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டு.

மனிதஉரிமைகள் துணைக்குழுவினரால் கொடுக்கப்பட்ட முடிவு வெளியிட்டு இரண்டு மாதங்களிற்கு மேலாகிய நிலையிலும் அம்முடிவை ஏற்றுக்கொண்டுள்ளதாக பதிவுத்தபால் அறிவித்த பின்னரும் மேன்முறையீடு செய்யப் போவதாக மிரட்டுகின்றார். மனிதஉரிமைகள் ஆணைக்குழுவினரால் முடிவு வெளியி;டப்பட்டு முப்பது நாட்களுக்குள் ஆட்சேபனையோ மேன்முறையீடோ செய்யப்படல் வேண்டுமென்ற அடிப்படை மனிதஉரிமைமீறல் தொடர்பான அடிப்டையே தெரியாதவரின் தலைமையின் கீழ் இயங்கும் நிர்வாகத்தால் வழிநடத்தப்படும் மாணவர்களின் நிலைதான் என்ன? தாங்களாக முன்வந்து நாங்கள் நஷ்டஈடு பெறுவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்காக மனமுவந்து மேன்முறையீடு செய்வதற்கு முன்வந்திருக்கும்போது அதை நாங்கள் மறுப்பதற்கில்லை. மாணவர்களே இவற்றைப்பற்றிச் சிந்தித்து அடிமைத்தழையிலிருந்தும் மருத்துவபீட அடக்குமுறையிலிருந்தும் வெளியில் வாருங்கள். ஏனைய பல்கலைக்கழகச் சமூகமே இதற்காகக் கைகொடுங்கள். மக்களே உங்கள் தீர்ப்புக்கும் எங்களிடம் சரியான ஆதாரபூர்வமான பல சான்றுகளுக்கு தயாராகுங்கள். நாங்கள் பகிரங்க விவாதத்திற்குத் தயார். மருத்துவபீட நிர்வாகம் இதற்குத் தயாரா?

நன்றி.


இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரன்
கி. மகிந்தகுமார்
யாழில் இருந்து குரு
சூரியன் இணையம்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-12-2004, 12:25 AM
[No subject] - by kiRukkan - 07-12-2004, 01:54 AM
[No subject] - by kavithan - 07-12-2004, 03:56 AM
[No subject] - by Eelavan - 07-12-2004, 06:47 AM
[No subject] - by kavithan - 07-29-2004, 02:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)