07-28-2004, 11:50 PM
கொட்டாவ படுகொலைகள் பற்றி புதுப் புதுத் தகவல்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. கொல்லப்பட்ட எட்டுப் பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த எட்டுப்போரில் ஒருவர் சிங்களவர் பெயர் நீல் தம்மிக. இவர் பொலனறுவையை சேர்ந்தவர். இவர் முன்னர் ராணுவத்தில் வேலை பார்த்தவர் பின்னர் இராணுவத்திலிருந்து வெளியேறி புல்டோஸர் ஓட்டும் தொழிலை செய்து வந்தாராம். பின்னர் கருணாவின் சிநேகிதம் கிடைக்கவே அவருடன் சேர்ந்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். இவர்தான் கொழும்பில் கருணாவின் சாரதியாக பணியாற்றியிருக்கிறார். கருணாவின் "கோளை'யாக்களின் மந்திரியும் இவர்தானாம்.
விடுதலைப் புலிகளை விட்டு கருணா தனிவழி சென்றபொழுது அவருடன் வந்தவர்களில் தம்பு என்பவரும் ஒருவர். கருணாவின் பொக்கிஷா பதியான குகனேஷனின் நட்புக்குரியவரானவரும் கூட. இதனால் இவருக்கு பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அதில் ஒன்று மார்க்கெட்டுக்குப் போய் சமையல் சாமான்களை வாங்கிவருவது. சக கூட்டாளிகளுக்கு சமைத்து சாப்பாடு சப்ளை செய்வது.
சம்பவதினம், இரவு பாயாசம் காய்ச்சி சாப்பிடுவோம் என்று இவர் சொல்லவே அதற்கு ஒகே கிடைத்தது. இரவு சாப்பாட்டுக்கு மேலே பாயாசம் பரிமாறினார்கள் சகாக்கள். சகாக்கள் எல்லோரும் வானொலியில் பாட்டுக்களை போட்டபடியே அயர்ந்து து}ங்கிவிட்டார்கள்.
வீட்டின் கொல்லைப்புறக் கதவை புூட்டாமல் திறந்து வைத்து விட்டு அவரும் சகாக்களோடு து}ங்கப்போனார். நள்ளிரவுக்குப் பின்னர் சைலன்ஸ் ரிவோல்வருடன் வந்து பத்து நிமிடங்களில் காரியத்தை சாதித்து விட்டு, ஓசைப் படாமல் பின் கதவாலேயே தம்புவும் வந்தவர்களும் போய்விட்டார்களாம்; இவர்கள் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னர் ராஜகிரியாவில் வாடகை வீடொன்றில் தங்கியிருக்கிறார்கள். இவர்களின் இந்த பாதுகாப்பு மாளிகை பற்றி புலிகளின் உளவுப் பிரிவுக்கு கிடைத்துவிட்ட சேதி குகனேசனுக்கு தெரியவரவே கொட்டாவை பகுதிக்கு போய் குடியேறினால் நல்ல பாதுகாப்பு என்று நினைத்திருக்கிறார்கள். இங்கு குடியேறி இரண்டு வாரங்கள்தான் ஆகிறதாம்.