07-28-2004, 05:27 PM
tamilini Wrote:Quote:ஆனால் ஏன் அக்கா உலகில் பெண் தனித்து வாழ முடியாது. இப்படி நீங்களே ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சொல்கிறீர்களே. தடைகளை உடைத்து வாழ முயற்சியுங்கள்.ஒரு பெண் அப்படி தனியாக தனித்து வாழ்ந்தால் அவளிற்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் என்ன....!
<b>ஒரு பெண் சிரித்துத் தவறான வழியில் போனால் அதற்கு ஆணும் உடந்தைதானே! அப்படியிருக்க பெண்ணை மட்டும் பழிப்பானேன்? ஏதோ ஆண்களெல்லாம் நல்லவர்கள் போன்றும் பெண்கள் மட்டும் நல்லவர்களில்லை என்றும் கூறி "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது" என்று வழக்கத்திலேயே சொல்ல ஆரம்பித்தார்கள்.
இதுபோன்ற கருத்துக்கள் பெண்ணினத்தையே எப்போதும் அடிமையாக நடத்துவதற்கு உண்டாக்கப்பட்டது. வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பெண்கள் அடங்கியிருக்கவேண்டும் ஆண்களின் தேவைகளை ஆண்களின் விருப்பப்படி நிறைவேற்றவேண்டும். இப்படி இருப்பதன் காரணத்தினாலே தான் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றெல்லாம் கூறப்பட்டது. சுருங்கச் சொன்னால் குழந்தைகளைப் பெறுவது வீட்டைக் காப்பது இவைகள் தான் பெண்களுடைய தொழிலே தவிர வாழ்க்கையிலே பெண்களுக்கு வேறு எந்தவிதமான பங்கும் கிடையாது.
கணவன் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் பெண்தான் வளைந்துகொடுக்கவேண்டும். பிறந்ததிலிருந்து இறக்கும்வரை யாரையாவது சார்ந்துதான் இருக்கவேண்டுமே தவிர தனித்து வாழக்கூடாது என்ற தவறான கருத்தின் அடிப்படையிலிருந்துதான் இதுபோன்ற பழமொழிகள் ஏற்பட்டுள்ளன. ஒருவேளை இதே காரணத்தினால் தான் முந்தைய "இந்து சட்டத்தில் கூட" பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டிருக்கலாம். பாரதி கண்ட கனவு போல ஆணுக்குப் பெண் சரிநிகர் வாழ்க்கைத்துணை அகத்தின் அழகு இல்லறத்தின் நல்லற விளக்கு என்ற சீரிய கருத்துக்கள் நம்மிடையே மிகவிரைவிலேயே பரவவேண்டும்.</b>
<b>She is a tender comrade
sweet comrade
loving mother
a benevolent angel.</b>
----------

