07-28-2004, 05:03 PM
சமாதானத்துக்காக புலிகள் பொறுமை காக்கின்றனர் ஆட்சியாளரோ தமிழ்த் தேசியத்தை உடைக்க முயல்கின்றனர்: யாழ் மாவட்ட துணை அரசியல்துணைப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு
கடந்த இரண்டரை வருடங்களாக விடுதலைப்புலிகளாகிய நாங்கள் சமாதானத்துக்காக பொறுமை காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் சிங்கள ஆட்சியாளர்களோ தமிழ்த் தேசியத்தை உடைப்பதற்காக முயன்று கொண்டிருக்கிறார்கள். எனினும் கடந்த காலங்களில் இவ்வாறான தடைகள் எல்லாவற்றிக்கும் முகங்கொடுத்து அவற்றை உடைத்தெறிந்து தான் எமது வரலாறு எனத் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் யாழ்.மாவட்ட துணை அரசியல் துறைப்பொறுப்பாளர் கி.செம்மணன்.
காரைநகரில் இடம்பெற்ற பிரதேச தேசிய எழுச்சிப் பேரவையின் கூட்டத்தில் கலந்து சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலாயக் கூட்டத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு தேசிய எழுச்சிப்பேரவையின் காரைநகர் பிரதேசத்திற்கான செயலாளர் வே.சிற்சபேசன் தலைமை தாங்கினார்.
அங்கு செம்மணன் மேலும் உரையாற்றுகையில், மாவீரர்களது தியாகத்தினால் கொண்டு வரப்பட்ட சமாதானம் நிலைக்க வேண்டுமானால் இராணுவப்பலத்துடன் அரசியல் பலமும் எமக்குத் தேவை. இதற்கு தமிழ் மக்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பு முக்கியமானது.
தாயகத்தின் விடுதலை முழுமை பெறும் போது தான் தாயகத்தின் அபிவிருத்தி சாத்தியமாகும் எமது மண் போதிய வளமானது அதனால் அனைத்துத் துறைகளிலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் அதற்காக அனைவரும் விடுதலைக்காக முதலில் உழைக்க வேண்டும் எனுவும் தெரிவித்தார்.
முன்னாதாக நேற்றுப் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெற்ற இக்கூட்டத்தில் பொதுச்சுடரை யாழ். மாவட்ட துணை அரசியல்துறைப் பொறப்பாளர் கி.செம்மணன் காரைநகர் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் செ.கானகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
1983 யூலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து நினைவுரையினை யாழ். மாவட்டத் தேசிய எழுச்சிப் பேரவையின் ஊடகப் பேச்சாளர் ப.கனகலிங்கம் ஆற்றினார்.
இதனிடையே காரைநகர்ப் பகுதியில் பரவிவந்த நெருப்புக் காய்ச்சல் நோயினைக் கட்டுப்படுத்த தேசிய எழுச்சிப் பேரவையினரது பங்களிப்புத் தொடர்பாக பலதரப்பாலும் பாராட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஈழநாதம் and puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>