06-18-2003, 05:15 PM
Karavai Paranee Wrote:நான் சொன்ன அந்த கருத்து ஒரு உண்மை சம்பவம். நான் தினமும் ஒரு வீட்டில் பார்க்கின்றேன். பகலெல்லாம் கடினப்பட்டு வெயிலில் நின்று உழைத்து விட்டு வீட்டிற்கு வந்தால் மனைவி காலிற்கு மேல் கால் போட்டுக்கொண்டு hPவீ பார்த்துக்கொண்டிருப்பார். எனக்குகூட சிலநேரங்களில் ஆத்திரம் வரும். அவர் வரும்போது அன்பாக ஒரு வார்த்தை பேசினாலே அவனின் வேலைக்களைப்பு பறந்துவிடும். காதலித்து திருமணம் செய்வதர்கள். மனைவி கர்ப்பவதி. சரி அதை விட்டாலும் ஒரு அன்பு வார்த்தையாவது வேண்டாமா. என்னுடைய கஸ்ட காலத்திற்கு நான் அவர்கள் இருக்கும் வீட்டில்தான் சாப்பாடு எடுக்கவேண்டும். நான் போகும் நேரத்தில்தான் கணவரும் வருவார். பல தடவைகள் அவதானித்துள்ளேன். இதை என்ன செய்வது. மனைவி புரிய வேண்டும். இதுநாள்வரையில் கணவன் சீறி சினந்தது இல்லை. பார்க்கும் எனக்கு வேதiனிக்கின்றது..
போனமாம் சாப்பாட்டை எடுத்தமாம் வந்தமாம் என இருந்தால் பிரச்சினையில்லைத்தானே?
உங்களுக்கு முன்னால்தான் அவர்கள் அன்பாக இருக்கவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?
நீங்கள் போனதன் பிறகு அவர்கள் அன்பா பேசி இருக்க்லாம்தானே?
ஒருவேளை நீங்கள் அங்கு நிற்பது அவருக்கு பிடிக்காமல் இருந்திருக்குமோ?
இப்போ இங்கே உள்ள பிரச்சியையைப் பார்க்கும் போது ரிவி பார்ப்பதைவிட காலுக்கு மேல் கால் போட்டதுதான் பிடிக்கவில்லைப் போல இருக்கு

