07-28-2004, 03:28 AM
அபாரமாக ஆடி வென்றது இந்தியா!
கங்குலியுடன் இணைந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமின்றி, அபாரமாக பந்து வீசி சிறப்பாக ஆடிய ஜெயசூர்யாவின் விக்கெட் உட்பட 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரேந்திர சேவக்கின் அபார ஆட்டத்தின் உதவியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற முக்கிய அரையிறுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் வாயிலாக 5 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி 12 புள்ளிகளுடன் இறுதிக்குத் தகுதிப் பெற்றுவிட்டது.
<b>ஆசியக் கோப்பைக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் இந்திய அணி மீண்டும் மோதும். </b>
பூவா-தலையா வென்ற இந்திய அணி, முதலில் களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா, 132 பந்துகளில் எடுத்த 130 ரன்களின் உதவியால் வெற்றி இலக்கை நோக்கி வேக நடைப் போட்ட இலங்கை அணி, அவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் சுறுசுறுப்பான பந்து வீச்சினாலும், மனோதிடத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களை மட்டுமே எடுத்தது.
கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 257 ரன்களை எடுத்திருந்த இலங்கை அணி, பத்தானின் பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறியது மட்டுமின்றி, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சந்தனாவின் விக்கெட்டை கடைசிப் பந்தில் இழந்தது.
8 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை எடுத்திருந்த இலங்கை அணி, கடைசி 6 பந்துகளில் 11 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் கானிடம் பந்தைக் கொடுத்த அணித்தலைவர் கங்குலி.
முதல் பந்தில் 2 ரன்களையும், அடுத்த பந்தில் 1 ரன்னையும் எடுத்தார் நூவான் சொய்சா. அடுத்த பந்தில் 2 ரன்களை எடுத்தார் மஹாரூஃப். ஆனால், கான் வீசிய யார்க்கரை அடித்தாட முயன்று க்ளீன் போல்ட் ஆனார் மஹாரூஃப்.
கடைசி 2 பந்துகளில் 6 ரன்களை எடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு. 1 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை இந்திய அணிக்கு. அடுத்தப் பந்தில் 1 ரன் எடுத்தார் கடைசியாக ஆட வந்த மலிங்கா.
கடைசிப் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் ஆட்டத்தை சமநிலையில் முடிக்கலாம். 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணியும், பௌண்டரி அடிக்க விடாமல் தடுத்தாலே போதும் வெற்றி நமதே என்ற நிலையில் இந்திய அணியும் இருந்தன. நன்றாக அடித்தாடும் வல்லமைப் பெற்ற சொய்சா, கானின் பந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
சற்றும் எதிர்பாராத வண்ணம் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே அழகாகக் குத்தி கடைசிப் பந்தை வீசினார் கான். அதனை அடித்தாட முயன்றார் சொய்சா. முடியவில்லை. அவ்வளவு தான். 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
இந்திய அணித்தலைவர் கங்குலியும், மற்ற வீரர்களும் ஈக்களைப் போல பறந்துச் சென்று ஜாஹீர் கான் மீது விழுந்து அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர். தோல்வியின் விளிம்பில் இருந்து சாதுர்யமாக ஆடி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிக்குத் தகுதிப் பெற்றது.
சேவாக்-கங்குலியின் சிறப்பான ஆட்டம்!
இந்திய அணிக்கு ஒரு அருமையான துவக்கத்தைக் கொடுத்த சச்சின் டெண்டுல்கர், எதிர்பாராத விதமாக சொய்சாவின் பந்தில் எல்பிடபிள்யூவாகி வெளியேறினார்.
அதன் பிறகு ஆட வந்த கங்குலியுடன் இணைந்து வீரேந்திர சேவாக் ஆடிய ஆட்டம் மிக மிகப் பொறுப்புடையதாக இருந்தது. தனது அதிரடி பாணியில் ஆடாமல் பந்துகளை நன்கு தெரிவு செய்து சிறப்பாக அடித்தாடி 92 பந்துகளில் 6 பௌண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜெயசூர்யாவின் பந்தில் தவறாக அவுட் கொடுக்கப்பட்டார் வீரேந்திர சேவாக்.
கங்குலியுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 26 ஓவர்களில் 134 ரன்கள் குவித்தார் சேவாக். அடுத்து ஆட வந்த திராவிட் ரன் எண்ணிக்கையை துரிதப்படுத்த முயன்று மஹாரூஃபின் பந்தில் ஆட்டமிழந்தார்.
யுவராஜூம், கங்குலியும் சிறப்பாக ஆடி 4வது விக்கெட்டிற்கு 71 ரன்களைக் குவித்தனர். கங்குலி 120 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 79 ரன்களை எடுத்திருந்த நிலையில் மலிங்காவின் பந்தை தூக்கியடிக்க முயன்று ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 46 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் சரியாக அரை சதத்தை எட்டியப் பிறகு ஆட்டமிழந்தார்.
இந்தியாவை மிரட்டிய சனத் ஜெயசூர்யா ஆட்டம்!
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் 14 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், ஒரு முனையில் ஜெயசூர்யா மிகச் சிறப்பாக ஆடி தனது அதிரடி பாணியில் மளமளவென்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார்.
134 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. இந்திய அணியின் வெற்றி உறுதிதான் என்று நினைத்தபோது ஆட வந்த தில்ஷானின் துணையுடன் ஜெயசூர்யா மிக வேகமாக ஆடி அடுத்த 16.3 ஓவர்களில் 6வது விக்கெட்டிற்கு 101 ரன்களைக் குவித்தார். தில்ஷான் ஆட்டமிழக்கும்போது (43.5 ஓவர்கள்) இலங்கை அணி 237 ரன்கள் எடுத்து, வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவை என்கின்ற நிலையில் இருந்தது.
சதத்தை அடித்துவிட்டு வெற்றியை நோக்கி அணியை முன்னேற்றிக் கொண்டிருந்த ஜெயசூர்யாவை வீழ்த்தினால்தான் இறுதிக்குச் செல்ல முடியும் என்பதனை உணர்ந்த இந்திய அணித்தலைவர் கங்குலி, சேவாக்கை மீண்டும் பந்து வீச அழைத்தார். 48வது ஓவரை வீசிய சேவாக்கின் முதல் பந்தை தூக்கியடிக்க முயன்று ஜெயசூர்யா ஆட்டமிழந்தவுடன் சுறுசுறுப்படைந்த இந்திய அணி, திட்டமிட்டு ஆடி வெற்றி பெற்றது.
81 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரேந்திர சேவாக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
webulagam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>