07-27-2004, 05:06 PM
tamilini Wrote:அனால் பெண்ணுக்கிருக்கும் தடைகள் ஆணுக்கிருப்பதில்லை... இருந்தாலும் குறைவு... அந்த மனப்பயத்தை ஏற்படுத்துவது சமூகம் தானே...! ஏதாவது தடக்கிவிழும் நேரத்தில்.. அதனை தட்டிக்கொடுத்து.. ஆறுதல் சொல்ல மாட்டார்கள்... கை கால் வைத்து அதனை நடமாட விட்டுவிடுவார்கள்... இந்த பொட்டைச்சிக்கு ஏன் இந்த வேளை பேசாமல் வீட்டுக்க இருக்கிறதுக்கு..... இப்படி என்டு நான் நேரடியாக கேட்டிருக்கிறேன்...! இப்படி பட்டவர்களை காணும் போது என்ன பண்ணவேணும் என்றே தெரியாமல் இருக்கும்.... அதைவிட இவர்களது கதைக்கெல்லாம் சில பெற்றோர் கவலைப்படுகிறார்கள் என்று எண்ணும் போது இன்னும் விசர் தான் வரும் அட முடிந்தவரை முயற்சி செய்தாள் முடியல.. என்டு ஆறுதல் மாட்டார்கள்... சரி ஆறுதல் வேண்டாம் அவதூறு என்றாலும் சொல்லாமல் இருக்கலாம் இல்லை... ஒரு ஆண் பெற்றோரின் சொல்லை மீறி ஒரு காரியம் பண்ணினால் ஏற்படுகின்ற தாக்கத்தைவிட ஒரு பெண்ணுக்கு தாக்கம் அதிகம்.. அது அவளின் வாழ்க்கைக்கே உளைவைக்கிற விடயமாக மாறும்......!
பெற்றோருக்கு தங்கள் பெண்பிள்ளைகள் மீது பயம் வரக் காரணம்... அவர்கள் தாங்கள் வாழ்ந்த சூழலையே இன்னும் எண்ணிக்கொண்டு காரியம் ஆற்ற முயல்வதால்தான்....! ஆனால் இன்று காலம் நல்ல பல மாற்றங்களை கருத்துப்பரப்புரைகளினூடாகவும் புரிந்துணர்வுகளின் ஊடாகவும் சட்டங்கள் செயற்பாடுகள் மூலமும் கண்டிருக்கிறது....! அதை பெற்றோர் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை...அது சாத்தியமற்றதும் கூட...! ஆனால் பிள்ளைகள் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் அவர்கள் தான் பெற்றோருக்கு தாம் சமூகத்தில் எதையும் சாதிக்கும் நிலையில் இருக்கின்றோம்...எதையும் சந்திக்கும் துணிவோடு இருக்கின்றோம் என்று வெளிக்காட்ட வேண்டும்...!
இப்போ உதாரணத்துக்கு சுதந்திரத்தின் பின் சிங்களவர்கள் தமிழர்களை அடக்கிய போதும் நெழிந்து கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தலைமைகள்....பிரபாகரன் எனும் இளைஞன் வந்து தமிழர்களின் உரிமைகளுக்காக புரட்சிகரக் குரல் எழுப்பும் வரை வெறும் அறிக்கைகளில் தான் தமிழர் உரிமைகள் கண்டனர்... கதைத்தனர்.....! அந்த அறிக்கைகளை பிரபாகரன் அறிந்திருந்தாரோ இல்லையோ...ஆனால் அவர் கண்ணால் கண்டதும் தான் சந்தித்த தமிழ் மக்கள் மீதான கொடூரங்களின் பாதிப்புமே..... அவரின் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி... இன்று உலகம் போற்றும் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது....இது ஒரு சாதாரண விடையம் அல்ல.... ஒரு சமூகத்தையே தனது கருத்தின் பால் இழுத்து வரவேண்டும்..! உங்களால் உங்கள் வீட்டில் உள்ள உங்கள் அப்பா அம்மாவையே உங்கள் பக்கம் இழுத்துவர முடியவில்லை என்றால்...அது அப்பா அம்மாவினது ஆளுமைக் குறைவல்ல...உங்களுடையதே...அதற்காக எப்படி ஒரு சமூகத்தைக் குறை சொல்ல முடியும்....சமூகம் என்பது பல நிலைக் குழப்பதாரிகளைக் கொண்டது...நாம் தெளிந்திருந்தால் மட்டுமே அந்தக் குழப்பதாரிகளை தெளிவாக இனங்கண்டு எம் முயற்சிகளால் மற்றவர்கள் எம்மீது நம்பிக்கை கொள்ள வைத்து ஒரு மாற்றத்தை உண்டுபண்ண முடியும்...குழப்பதாரிகளோடு சேர்ந்து நாமும் குழம்பிக் கொண்டு அல்லது அவர்களைக்கண்டு அஞ்சிக்கொண்டு சமூகத்தையே குறை சொல்வதில் பயனில்லை......! அதனால் எவரிலும் எந்த வளமான மாற்றமும் வரப் போவதில்லை....அது ஆண்கட்டும் பெண்ணாகட்டும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

