07-27-2004, 02:02 AM
<span style='color:red'><b>கொட்டாவாக் கொலைகளிற்கு அரசு கண்டனம் </b>
கொட்டாவாவில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான கண்டனத்தை சிறீலங்கா அரசு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
எண்மரைக் கொலை செய்த இந்தப் பயங்கரவாத நடவடிக்கை பொலிசாருக்குத் தெரிய முன்பே இது பற்றிய தகவல்கள் தமிழ்நெற் இணையத்தில் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களையும், கொலையாளிகளையும் இனங்காணுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
இப் பயங்கரவாதச் சம்பவமானது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடிப்பதாகவோ அல்லது விடுதலைப்புலிகளுக்கம் அரசிற்குமிடையேயான நேரடிப்பேச்சை ஆரம்பிப்பதற்கான உறுதியைத் தருவதாகவே அமையாது எனவும் தெரிவித்துள்ளதோடு அரசு சர்வதேச ஏற்பாடுகளின் பிரகாரம் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என்றும், நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை பேணுவதற்கு முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவரான நீல் தம்மிக வெலிகந்தையைச் சேர்ந்தவரென்றும், இவர் ஏற்கனவே மட்டக்களப்பில் பணியாற்றியவர் என்றும் குகநேசன் உட்பட விகாரையில் வைத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாட்டை இவரே செய்தார் என்றும் தெரிய வந்துள்ளது. பல புனைபெயர்களை கொண்ட இவர், சமீபகாலம் வரை கொழும்பில் கருணாவைத் தேவையான இடங்களிற்கு அழைத்துச் செல்லும் சாராதியாக-பாதுகாவலராக இருந்தார் என்றும் தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் நடந்த வீட்டில் மொத்தம் 10 ஆண்கள் இருந்ததாகவும் அவர்களில் இருவரே இக் கொலைகளைச் செய்து விட்டுத் தப்பியிருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகின்றனர். </span>
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>