07-26-2004, 09:21 AM
மயுரன் நீங்கள் பேசுவது இந்த தலைமுறை பற்றியது. அதாவது இப்போது தமிழ் படிக்க சொல்லி வற்புறுத்துகின்ற பெற்றோர்கள் தமிழ் மண்ணோடு நேரடித்தொடர்பு உள்ளவர்கள். அவர்கள் இறக்கும் வரையும் தமிழும் தமிழ் நிலமும் அவர்களுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும்.. அந்த ஆர்வமும் இருக்கும். ஆனால் இனி வரும் தலைமுறை தமிழோடு நேரடி தொடர்பு அற்றதாக இருக்கும். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் படி என்ற ஆர்வத்தை ஊட்டுவார்களா? ஒரு வேளை அவர்கள் தமிழ் படிக்க அதிர்ப்தி அடைந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்ளத் தான் வேணுமோ என்று தோன்றுகிறது. இதனை இப்படியும் சொல்லலாம்.. மூன்று வருடங்களுக்கு முன்பு எப்படியோ சுவிஸ் போய் எப்படியோ அசூல் அடித்த ஒருவர் சொன்னார்.. இலங்கையில இருக்கேலாது. அங்கை சரியான வெயில்.. அது சரியான முட்டாள்த்தனம். ஆனால்.. சுவிஸில் பிறந்து வளர்ந்த ஒரு குழந்தை இலங்கை போய்.. அங்கு இருக்க முடியாது.. சரியான வெயில் என்றால்.. அதில் இருக்கின்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேணும்.. வெயிலில் பிறந்து வளர்ந்த என்னை வின்ரர் எப்படி நெருடியதோ... அது போலத் தான்..... உண்மையைச்சொன்னால்.. இன்று புலத்தில் தமிழ் பேசுகின்ற குழந்தைகள் நன்றாக பேசுகின்றார்கள்.. பொங்கும் புலியாய் பாய்ந்திடுவோம் என கவிதை படிக்கிறார்கள்.. ஆனால்.. தங்கள் அறிந்த மொழிகளிலேயே அவற்றை எழுதி வைத்திருக்கிறார்கள்.. ஆக.. இப்போதே கிட்டத்தட்ட எழுத்துத் தமிழ் அழிந்து விட்டது.. ஒரு மொழி வளர்ச்சிக்கு பெருமளவு உந்து சக்தியாக இருப்பது அம் மொழி சார்ந்த சூழல் தான்.. அநத சூழலை இழக்கின்ற போது அந்த மொழி குறித்த தேடலும் ஆர்வமும் அற்றுப் போகும் என்பதே நியதி...
அவுஸ்ரேலியாவில் இப்போது (சில ஆண்டுகளுக்கு முன்பாகவே)பல்கலைகழக புகுமுக தேர்வுக்கு தமிழையும் ஒரு பாடமாக்கியிருக்கிறார்கள்..
இலங்கையில் சாதாரண தரம் அல்லது ஆண்டு 9 க்கு பின் படித்தவர்கள் அந்த தமிழி அறிவோடு இங்கு வந்து புகுந்து விளையாடினார்கள்.. ஆனால்.. இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்... தமிழை விட வேறு ஏதாவது இலகுவான பாடமாக செய்யலாம் என்று கருதுகிறார்கள்...

..