Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழவேந்தன் எம்.பி. இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
#4
<b>மிரட்டல்! * மத்திய, தமிழக அரசுகளுக்கு புலி ஆதரவாளர்கள் : * பெங்களூர் தமிழர் அமைப்பு மாநாட்டில் எச்சரிக்கை </b>

<img src='http://www.yarl.com/forum/files/fpn-1a.jpg' border='0' alt='user posted image'>



பெங்களூர்: ""தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசும், தமிழக அரசும் செயல்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்'' என்று பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், மத்திய அரசை ஆதரிக்கும் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார்.


இலங்கையில் ஈழம் என்ற பெயரில் தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக "உலகத் தமிழர் பேரமைப்பு' என்ற அமைப்பு இந்தியாவில் செயல்படுகிறது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தும். ஜெயலலிதா முதல்வரான பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் அமைப்புகள் ஒடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மாநாடு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது.

பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். கவிஞர் காசி அனந்தன் கொடியேற்றினார். இந்த மாநாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் தலைவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான நெடுமாறன் பேசும்போது மத்திய அரசை கடுமையாக எச்சரித்தார். அவர் பேசியதாவது:

இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த, ஈழவேந்தன் எம்.பி.,யை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய கையோடு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவில் நடத்தப்படும் தமிழர் மாநாட்டில் பங்கேற்க வரும் இலங்கை கலைஞர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் பல மொழி பேசுபவர்கள், பல இடங்களில் மாநாடு நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் வசிக்கும் அந்தந்த மொழி கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஆனால், அவர்கள் யாரும் அவதிப்படுவதில்லை.


<img src='http://www.yarl.com/forum/files/fpn-01-b.jpg' border='0' alt='user posted image'>


தமிழர்கள் மாநாட்டுக்கு வருபவர்கள் மத்திய அரசால் திட்டமிட்டு தடுக்கப்படுகின்றனர். ஈழவேந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்பி தமிழர்களுக்கு அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர்களை அவமானப்படுத்தும் செயலை, டில்லியிலுள்ள சில அதிகாரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த அதிகாரிகள் இருக்கும் வரை தமிழர்களுக்கு மதிப்பு இருக்காது. இந்த அதிகாரிகளின் அத்து மீறல்கள் பற்றி பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன நினைக்கின்றனர். இருவரும் பதில் சொல்ல வேண்டியது அவசியம்.

ஈழவேந்தனை திருப்பி அனுப்பி தமிழர்களை, தமிழை அவமதித்து இருக்கின்றனர். இது தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம். ஈழவேந்தன் பிரச்னையோடு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால், எங்களை அன்னியராக கருதுகிறீர்கள் என்று நினைக்கத் தோன்றும். அடக்கமாக சொல்கிறேன், இவ்வாறு நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

மொத்தம் 27 நாடுகளில் வசிக்கும் அரேபியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்து முடிவு எடுக்கின்றனர். அரேபியர்களால் முடியும் போது, 70 நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் முடியாதா? இந்தியாவில் எல்லா இனத்தை காட்டிலும், தமிழினம் சிறுமைப்படுத்தப்படுகிறது.

இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளுக்கு, இந்திய துõதராக தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு மொழியை சேர்ந்தவர்கள் துõதராக நியமிக்கப்படுவதால், அந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் உரிமை பாதுகாக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் தமிழர்கள் துயரங்களை சந்திக்க அந்த நாடுகளின் துõதர்கள் காரணமாக இருக்கின்றனர்.

இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ள இலங்கை அரசு துடிக்கிறது. நேபாளம், பூடான் நாடுகள் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்வதில் அர்த்தமுள்ளது. ஆனால், எந்த நாடுகளிடம் இருந்தும் பயத்தை சந்திக்காத இலங்கை, பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ள அவசியம் இல்லை. இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்டு இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது. இலங்கை தமிழர்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இந்த உண்மையை மத்திய அரசு புரிந்து கொள்ளா விட்டால் உங்களை (மத்திய அரசு) யாராலும் காப்பாற்ற முடியாது. இலங்கை தமிழர்கள் தனி நாடு கேட்டு பிரிந்து சென்றால், தமிழ்நாடும் பிரிந்து விடும் என்று நினைத்து தப்புக் கணக்கு போட வேண்டாம். அது உண்மையானால் கிழக்கு வங்காளம் பிரிந்த நேரத்திலேயே, மேற்கு வங்காளமும் பிரிந்து இருக்குமே. தமிழர்களுக்கு உதவினால், நன்றி உணர்ச்சியுடன் இருப்போம், இல்லாவிட்டால் வேறு "உணர்வு' வரும்.

இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் தமிழகத்துடன் கலந்து பேசியே முடிவு எடுக்க வேண்டும். தன்னிச்சையாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த நலன் தவிர வேறு எதுவும் தெரியாது. இவ்வாறு நெடுமாறன் பேசினார்.

இந்த மாநாட்டில் வைகோவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட அமைப்பினர் ஊடுருவல் திடீர் கோஷத்தால் பரபரப்பு: உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு நடந்து கொண்டிருந்த நேரத்தில், மாநாட்டு அரங்கில் பார்வையாளர்கள் போர்வையில் இருந்த "கன்னட ரக்ஷன வேதிகே' அமைப்பை சேர்ந்தவர்கள், திடீரென கன்னடக் கொடிகளை அசைத்தபடி, நெடுமாறன் ஒழிக என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, கூட்டத்தில் இருந்தவர்கள் அவர்களை நோக்கி பாய்ந்தனர். வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கோஷம் போட்ட கன்னட சங்கத்தினரை வெளியே அழைத்துச் சென்று ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

மாநாடு, பலத்த கெடுபிடிக்களுகிடையே நடந்தது. பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து தான் தமிழீழத் தமிழர் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். கர்நாடகப் போலீசார் கண்காணிப்புடன் பலத்த பாதுகாப்பு செய்திருந்தனர். உளவுத் துறை போலீசார் பலர் சாதாரண உடையில் ஒவ்வொருவரையும் கண்காணித்து வந்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் வீடியோவில் பதிவு செய்தனர். அதிலும் குறிப்பாக, உலகத் தமிழரின் தனி உடை என்று அறிவிக்கப்பட்ட சிறப்பு உடையில் வந்திருந்தவர்களை கவனத்துடன் வீடியோ படம் எடுத்தனர். மாநாட்டுப் பேச்சுக்கள் முழுவதையும் உளவுத் துறை டேப் செய்தது.

மாநாட்டு மண்டபத்தின் நுழைவு வாயிலைச் சுற்றிலும் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும் நடந்தது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தியும், திராவிட தேசியம், இந்திய தேசியத்தை விமர்சித்தும் பல நுõல்கள், கடவுள் மறுப்பு நுõல்கள், ஆரியத்தை விமர்சிக்கும் நுõல்கள், நெடுமாறன், வைகோ பற்றிய நுõல்கள், விடுதலைப் புலிகள் புகழ் பாடும் நுõல்கள் என்று பல்வேறு நுõல்கள் இடம் பெற்றிருந்தன.

நன்றி
தினமலர்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-26-2004, 12:47 AM
[No subject] - by kavithan - 07-26-2004, 12:50 AM
[No subject] - by kavithan - 07-26-2004, 05:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)