07-26-2004, 05:03 AM
26 ஒஞிஙீட், 2004
<img src='http://www.dailythanthi.com/images/news/20040726/spo1.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஆசிய கோப்பை கிரிக்கெட்
பழிதீர்த்தது பாகிஸ்தான் அணி
59 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி </span>
கொழும்பு, ஜுலை. 26-
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழைய தோல்விக்கு பழி தீர்த்தது.
லட்சுமண் நீக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் இலங்கையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா, பரம எதிரி அணியான பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இந்திய அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வி.வி.எஸ். லட்சுமண் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
பாகிஸ்தான் பேட்டிங்
`டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் இன்ஜமாம் தமது அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி தொடக்க வீரர்களாக இம்ரான் நசீரும், யாசிர் ஹமீதும் களம் இறங்கினர்.
யாசிர் ஹமீது 31 ரன்
முதல் ஓவரின் கடைசி பந்திலேயே தொடக்க ஜோடி பிரிந்தது. இந்த ஜோடியை பிரித்தவர் இர்பான் பதான். 1 ரன் எடுத்து இருந்த இம்ரான் நசீர், பதான் பந்தில் எல்.பி.டபிள்ï முறையில் அவுட் ஆனார்.
இம்ரான் நசீரை தொடர்ந்து யாசிர் ஹமீதுடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். ஹமீது தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட சோயிப் மாலிக் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இந்திய பந்து வீச்சாளர்கள் எந்த திசையில் பந்து வீசினாலும் அதை மாலிக் வெளுத்துக் கட்டினார்.
தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய மாலிக் பவுண்டரி அடித்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். 41 பந்துகளை சந்தித்த சோயிப் மாலிக் அரை சதத்தை கடந்தார். அப்போது பாகிஸ்தானின் ஸ்கோர் 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்னாக இருந்தது.
18.3 ஓவரின் முடிவில் யாசிர் ஹமீது - மாலிக் ஜோடியை கும்பிளே பிரித்தார். 31 ரன் எடுத்து இருந்,த யாசிர் ஹமீது கும்பிளே பந்தில் கிளீன் போல்டு ஆனார். அவரைத் தொடர்ந்து இன்ஜமாம் களம் இறங்கினார்.
மோசமான பீல்டிங்-பந்துவீச்சு
இந்திய அணியினரின் பந்து வீச்சு தான் நேற்றைய ஆட்டத்தில் மோசமாக இருந்தது என்றால், பீல்டிங் அதைவிட மோசமாக இருந்தது. 25 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 137 ரன் எடுத்து இருந்தது.
இன்ஜமாம்-மாலிக்கின் அதிரடி ஆட்டத்தால் 27.4 ஓவரில் பாகிஸ்தான் 150 ரன்னை கடந்தது. முதல் 50 ரன்னை 71 பந்துகளில் எடுத்த பாகிஸ்தான் 2-வது 50 ரன்னை 46 பந்துகளிலும், 3-வது 50 ரன்னை 60 பந்துகளிலும் எடுத்தது.
சோயிப் மாலிக் `சதம்'
29.1 ஓவரில் ஹர்பஜன்சிங் வீசிய பந்தில் இன்ஜமாம் இமாலய சிக்சர் ஒன்றை விளாசினார். 34 ரன் எடுத்து இருந்த நிலையில் ஹர்பஜன் வீசிய பந்தை இன்ஜமாம் வேகமாக அடிக்க யுவராஜ்சிங் அபாரமாக கேட்ச் செய்து அவரை அவுட் ஆக்கி மைதானத்தில் இருந்து பெவிலியனுக்கு அனுப்பினார்.
பின்னர் எந்தவித பதட்டமும், சிரமமும் இன்றி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சோயிப் மாலிக் சதம் அடித்தார். இதனால் 42.4 ஓவரில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்னை தொட்டது.
பாகிஸ்தான் அணி ரன் வேட்டை நடத்தியதைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் ஆனந்த துள்ளாட்டம் போட்டனர். மாறாக இந்திய அணியினரின் மோசமான பீல்டிங் மற்றும் பந்து வீச்சு தொடரவே அது இந்திய ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது.
தெண்டுல்கர் அபாரம்
முன்னணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசாத நிலையில், பகுதி நேர பந்து வீச்சாளரான தெண்டுல்கர் அபாரமாக பந்து வீசினார். கடைசி கட்ட ஓவர்களில் படுநேர்த்தியாக பந்து வீசிய தெண்டுல்கர் பாகிஸ்தான் அணியினரின் ரன் வேட்டைக்கு அணை போட்டார்.
46-வது ஓவரின் முடிவில் சோயிப் மாலிக்கின் அபார ஆட்டத்திற்கு தெண்டுல்கர் முற்றுப் புள்ளி வைத்தார். 127 பந்துகளை சந்தித்த சோயிப் மாலிக் 18 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 143 ரன் குவித்து அவுட் ஆனார்.
பாகிஸ்தான் 300 ரன்
மாலிக்கின் அவுட்டை தொடர்ந்து அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பதான், தெண்டுல்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஷேவாக் அவுட்
301 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா பின்னர் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷேவாக்கும், நட்சத்திர வீரர் தெண்டுல்கரும் களம் இறங்கினர்.
<img src='http://www.dailythanthi.com/images/news/20040726/spo2.jpg' border='0' alt='user posted image'>
முதல் ஓவரில் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் பந்து வீசினார். இந்த ஓவரில் தொடக்க ஜோடி 12 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் ஷேவாக் 1 ரன் எடுத்திருந்த நிலையில் சபீர் அகமது பந்தில் அவுட் ஆனார்.
கங்குலி அதிரடி ஆட்டம்
ஷேவாக்கை தொடர்ந்து தெண்டுல்கருடன் கங்குலி இணைந்தார். தெண்டுல்கர் ஒருபுறம் நிதானமாக ஆட மறுமுனையில் கங்குலி ஆக்ரோஷ ஆட்டத்தில் ஆடுபட்டார். 7.5 ஓவரில் இந்திய அணி 50 ரன்னை கடந்தது.
ஸ்கோர் 79-ஐ எட்டியபோது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கங்குலி 39 ரன்னில் அவுட் ஆனார். 45 பந்துகளை சந்தித்த கங்குலி 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.
பின்னர் வந்த டிராவிட் 5 ரன்னிலும், யுவராஜ்சிங் 28 ரன்னிலும் (29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன்), கïப் 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்னாக இருந்தது.
தெண்டுல்கர் அரை சதம்
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும், மறுமுனையில் தெண்டுல்கர் பொறுப்புடன் நிலைத்து நின்று நிதானமாக ஆடினார். ஸ்கோர் 155 ஆன போது தெண்டுல்கர் அரை சதத்தை தொட்டார். 77 பந்துகளை சந்தித்த தெண்டுல்கர் 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தை அடித்தார்.
7-வது வீரராக இறங்கிய பதான், தெண்டுல்கருடன் இணைந்து ஒன்றிரண்டு ரன்னாக அடித்தார். 41.1 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்னை கடந்தது.
முதல் 50 ரன்னை 52 பந்துகளில் அடித்த இந்திய அணி, 2-வது 50 ரன்னை 66 பந்துகளிலும், 3-வது 50 ரன்னை 74 பந்துகளிலும், 4-வது 50 ரன்னை 70 பந்துகளிலும் அடித்தது.
ஸ்கோர் 42.5 ஓவர்களில் 214 ஆக உயர்ந்த நிலையில் தெண்டுல்கர் 78 ரன்னில் அவுட் ஆனார். 103 பந்துகளை சந்தித்து அவர் இந்த ரன்னை எடுத்தார்.
எதிர்பார்ப்பு
தெண்டுல்கர் அவுட் ஆவதற்கு முன்பு வரை லாட்டரியில் பரிசு விழுவது போல் ஒருவேளை இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது அவுட்டுக்கு பின்னர் இருந்த நம்பிக்கையும் தவிடு பொடியானது. பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றால் ஒரு பரபரப்பு இருக்கும். ஆனால் நேற்றைய ஆட்டத்தின்போது சிறிது கூட பரபரப்பும், எதிர்பார்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதான் 38 ரன்னில் அவுட் ஆனார்.
பாகிஸ்தான் வெற்றி
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணியால் 241 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் சொந்த மண்ணில் இந்தியாவிடம் பெற்ற தோல்விக்கு பாகிஸ்தான் நேற்று பழிதீர்த்துக் கொண்டது.
<img src='http://www.dailythanthi.com/images/news/20040726/spo3.jpg' border='0' alt='user posted image'>
போனஸ் புள்ளி
பாகிஸ்தானுக்கு எதிராக 240 ரன் எடுத்தால் இந்திய அணிக்கு ஒரு போனஸ் புள்ளி கிடைக்கும் நிலை இருந்தது. எந்த வழியிலும இந்திய அணி இனிமேல் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் இந்த போனஸ் புள்ளியையாவது பெற வேண்டும் என்ற முனைப்புடன் கடைசி கட்ட வீரர்கள் போராடினர். அவர்கள் நினைத்தது போல் தட்டுத்தடுமாறி 241 ரன் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி ஒரு போனஸ் புள்ளியை பெற்றது. பாகிஸ்தான் 5 புள்ளியை மட்டுமே பெற்றது. அந்த அணிக்கு ஒரு போனஸ் புள்ளி கைநழுவிப் போனது. பாகிஸ்தான் அணியை தான் இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. மாறாக போனஸ் புள்ளியையாவது பெற முடிந்ததே என ரசிகர்கள் ஆறுதல்பட்டுக் கொண்டனர்.
ஸ்கோர் போர்டு
பாகிஸ்தான்:-
இம்ரான் நசீர்
எல்.பி.டபிள்ï (பி) பதான் 1
யாசிர் ஹமீது (பி) கும்பிளே 31
சோயிப் மாலிக் (சி) கïப் (பி) தெண்டுல்கர் 143
இன்ஜமாம் (சி) யுவராஜ் (பி) ஹர்பஜன் 34
யுகானா (சி) கïப்(பி )கும்பிளே 29
அப்துல் ரசாக் (பி) பதான் 22
மொயின்கான் (சி) ஹர்பஜன் (பி) பதான் 14
யுனுஸ்கான் (பி) தெண்டுல்கர் 4
சமி (சி) கïப் (பி)தெண்டுல்கர் 1
அக்தர் (அவுட் இல்லை) 0
எக்ஸ்டிரா 21
மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு) 300
--
விக்கெட் வீழ்ச்சி:-
1-2, 2-105, 3-171, 4-234, 5-277, 6-286, 7-296, 8-300, 9-300.
பந்து வீச்சு விவரம்:-
பதான் 10-0-52-3
பாலாஜி 7-0-61-0
நெக்ரா 8-1-54-0
ஹர்பஜன் 10-0-50-1
கும்பிளே 10-0-49-2
தெண்டுல்கர் 5-0-28-3
இந்தியா:-
ஷேவாக் (சி) மொயின்கான் (பி) சபீர் அகமது 1
தெண்டுல்கர் (சி)இம்ரான்நசீர் (பி) மாலிக் 78
கங்குலி (பி) சமி 39
டிராவிட் எல்.பி.டபிள்ï (பி) அப்துல் ரசாக் 5
யுவராஜ் (சி மற்றும் பி) மாலிக் 28
கïப் (ரன் அவுட்) 3
பதான் (சி) இம்ரான் நசீர் (பி) அக்தர் 38
ஹர்பஜன் (சி) யுனுஸ்கான் (பி) சபீர் அகமது 2
பாலாஜி (அவுட் இல்லை) 5
கும்பிளே (அவுட் இல்லை) 4
எக்ஸ்டிரா 38
மொத்தம் (50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 241
--
விக்கெட் வீழ்ச்சி:-
1-17, 2-79, 3-94, 4-139, 5-151, 6-214, 7-223, 8-233
பந்துவீச்சு விவரம்:-
அக்தர் 10-0-51-1
சபீர் அகமது 10-0-38-2
சமி 10-0-57-1
அப்துல் ரசாக் 10-2-38-1
சோயிப்மாலிக் 10-0-42-2
நன்றி
தினத்தந்தி

[b][size=18]