07-26-2004, 01:54 AM
kavithan Wrote:வடிவா கேட்டபின்தானே லிங்கே கொடுத்தேன்.. முதற்பக்க செய்திகள் தொண்டைக்குழி நசுக்கப்பட்ட ஊடகங்களிலிருந்து வருவது.. அதுகளும் பார்த்து மற்ற ஊடகங்களும் பார்த்து சரி பிழை அவதானித்துத்தானே கருத்து எழுதுகிறேன்..Mathivathanan Wrote:T 56 ரக துப்பாக்கியால்சுடப்பட்டனர் என்று அறிக்கை விட்டாங்கள்.. பொலீஸ் இப்ப 9MM துப்பாக்கிதான் எல்லாருக்கும் பாவிச்சிருக்க எண்டு அறிக்கை விட்டிருக்கிது..தாத்தா பொய் சொல்ல வெளிக்கிட்டா தொடர்ந்து பொய்தான் சொல்லணும்.......... நீங்கள் வதந்தி எண்டு சொன்னதை அரசியல் ஆய்வாளர் என்னெண்டு சொல்லிறார் எண்டு வடிவாய்க்கேளுங்கோ..
புலனாய்வுப்பிரிவு சம்பந்தப்பட்டவர்பற்றிய செய்தி பிபிஸி தமிழோசை செய்தியரங்கத்தில் மேலதிக தகவல்கள் இருக்கின்றன.. கேட்டுப்பாருங்கள்..
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tam..._worldnews
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எண்டும் அரசாங்கம் சொன்னதெண்டு முதல் பக்கத்திலை இருக்கிற செய்தியிலை கிடக்கு வடிவாய் உண்மையான செய்திகளை வாசியுங்கோ...கேளுங்கோ..... உலகத்தைப் புரிஞ்சு நடவுங்கோ,....... நீங்கள் மட்டும் ஓரு விதிவிலக்காய் நிக்கிறியள்....இதுக்குமேலை உங்கள் செய்திப்பிரிவில் உள்ள கருத்துக்களுக்கு பதில் எழுதப் பிடிக்கலை.........bye
மேலும்.. சிங்கள இராணுவ அதிகாரிகள் அறுத்துறுத்து சொல்கிறார்கள்.. தங்களுக்கும் கருணாவுக்கும் எந்தவித் தொடர்புமில்லையென்றும்.. அனுரா பண்டாரநாயக்காகூட மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.. இல்லை அவர்கள் சொல்வது பொய் என சொல்லும் விடுதலைப்புலிகள் அமைப்பை தகுந்த ஆதாரத்தை முன்வைக் கோருகின்றனர்..
விதார் ஹெல்கிஸன்கூட இதனை வலியுறுத்தி பேட்டி கொடுத்திருந்தார்.. எந்தவிதமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று அறுத்துறுத்து கூறியுள்ளார்..
கருணாஅம்மான் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை..
பெண்பித்தன் காற்றோடு போனது..
நிதிமோசடியென கடைசியாக கொண்டுவந்த மஹாஜல கூட ஒண்றாயிருந்தபோது பதியப்பட்டது என்ற உண்மை வெளிக்கிட்டு புஸ்வாணமாகிலிட்டது..
ஒரு அன்னிய சக்தியின் என்ற முடிச்சு.. இலங்கை இராணுவம்.. இந்திய உளவுப்படை ஒன்றும் பலிக்கவில்லை..
தற்போது சிவாஜிலிங்கத்தின் பினாலிருந்து அமெரிக்க முடிச்சு போடப்படுகின்றது.. அதற்கு சரியான பதில் வரும்வரை அதைப்பற்றி தற்போது விடுவோம்..
முடிச்சுப்போட்டு துரோகியாக்கி வெல்லமுடியாது.. அந்தக்காலம் மலையேறிவிட்டது.. தற்போது பரந்த ஊடக காலம்..
எவ்வளவுதான் ஒருபக்கக்கருத்து சார்பான கருத்துக்களை தமிழ் ஊடகங்களை அச்சுறுத்தி வெளிக்கொணர்ந்தாலும் அதன் உண்மைத்தன்மை வெளியில்வர காலம் எடுக்காது..
குடாநாட்டுக்கு மட்டக்களப்பிற்கு திருகோணமலைக்கு பலரும் போய் வருகிறார்கள்.. நிலைமைகளை அவதானிக்கிறார்கள்
மேலும் கண்காணிப்புக்குழு.. ஐரோப்பிய ஒன்றியம்.. அமெரிக்காவுடன் கூடிய ஹலோ ட்றஸ்ற் என்பனவும் சரியான அறிக்கைகள் விட்டுக்கொண்டுதானிருக்கின்றன..
எத்தனை நாட்கள்தான் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை தொடரமுடியும்..? துரோகிப்பட்டம் சூட்டியே கொண்று குவித்த உடலங்கள் எத்தனை எத்தனை..?
சிங்களவன் தமிழனை கொன்றது சொற்பம்.. தமிழன் தமிழனை கொன்றது பலமடங்கு.. சிங்கள பிரதேசத்தில் தமிழன் அடைக்கலம் பூருவது சிங்களவன் கொடுமையானவன் என்பதாலல்ல.. தமிழன் கொலைகாரன் என்பதால்.. அது புரிந்தால் ................
Truth 'll prevail

