07-26-2004, 12:47 AM
[size=24]<b>மாற்றுக் குறையாத தமிழ்த் தேசியவாதி ஈழவேந்தனை திருப்பி அனுப்பிய இந்திய அரசைக் கண்டிக்கிறோம் TCWA</b>
<img src='http://sooriyan.com/images/stories/lion/indianflag.jpg' border='0' alt='user posted image'><img src='http://sooriyan.com/images/stories/lion/nojustice.jpg' border='0' alt='user posted image'>
பங்களுரில் நடக்கும் உலகத் தமிழர் பேரவையின் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சென்ற திரு. மா.க. ஈழவேந்தன் சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட அநாகரிகத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஈழவேந்தன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்பதைக் கூட இந்திய அரசு கவனத்தில் எடுக்காதது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
சார்க் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசா அனுமதியின்றி செலவு மேற்கொள்ளலாம் என்ற விதி இருக்கிறது. இந்த விதியை இந்திய அரசு கடைப்பிடிக்கத் தவறிவிட்டது.
ஈழவேந்தன் மாற்றுக் குறையாத தமிழ்த் தேசியவாதி. தனது வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழ்மொழி உயர்வுக்கும் தமிழ்த் தேசியத்தின் உய்வுக்கும் செலவழித்தவர்.
முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானி காலத்திலேயே ஈழவேந்தன் இரவோடு இரவாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
வைகோ மீது பொடா சட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் பழிவாங்கு முகமாக ஏவியபோதும் இதே அத்வானி உள்ளுர அதனை வரவேற்று மகிழ்ந்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வைகோவை சிறையில் அடைக்கப்பட்டதை அவர் கண்டிக்காதது அதனை எண்பிக்கிறது. அது மட்டுமல்ல வைகோவை ஒருமுறை தானும் சிறையில் சென்று பார்க்காதவர் அத்வானி.
இந்திய மைய அரசில் மேலாண்மை செலுத்தும் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பகைவர்களே ஈழவேந்தன் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் என நாம் நம்புகிறோம்.
இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அதிகார கும்பலே அதன் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் மேலாண்மை செலுத்துகிறது.
பாரதிய ஜனதா சரி, இந்திய காங்கிரஸ் கட்சி சரி ஆட்சி அமைக்க திமுக, பாமக, மதிமுக கட்சிகளின் ஆதரவை வேறு வழியின்றி பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த இரண்டு இந்தியத் தேசியக் கட்சிகளும் அமைச்சர் பதவி என்ற எலும்புகளை வீசி திராவிடக் கட்சிகளின் வாயை அடைத்துவிட்டு தமது திரைமறைவு தமிழ்த் தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்கின்றன.
இந்தத் தமிழ்த் தேசிய எதிர்ப்பின் வெளிப்பாடே தமிழர்களை ஒடுக்கி ஆள நினைக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா நல்கும் தாராள நிதி, இராணுவ மற்றும் ஆயுத உதவிகளாகும்.
மிக விரைவில் கைச்சாத்திடப்பட இருக்கும் இந்திய-சிறீலங்கா இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா கனரக ஆயுதங்கள், போர் விமானங்கள், போர்க் கப்பல்களை சிறீலங்கா இராணுவததுக்கு வழங்க இருக்கிறது. இந்த ஆயுதங்களும் கப்பல்களும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியாத சங்கதி அல்ல. அதைத் தெரிந்தே செய்கிறார்கள்.
ஈழவேந்தன் இந்தியாவின் எதிரி அல்ல. வரலாற்று அடிப்படையில் இந்தியாவை நட்போடு பார்ப்பவர். அவரது இரண்டு பிள்ளைகளும் தமிழ்நாட்டுத் தமிழர்களை திருமணம் செய்தவர்கள்.
ஈழவேந்தனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் தனிப்பட்ட ஒருவருக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல. முழு உலகத் தமிழினத்துக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும். இந்த உண்மையை இந்திய காங்கிரசும் இந்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
Tamil Creative Writers Association
<img src='http://sooriyan.com/images/stories/lion/tcwa.jpg' border='0' alt='user posted image'>
தொடர்பு:
Tamil Creative Writers Association
தொ.பேசி - (416) 281 1165 (416) 447 6314 (905) 949 0824
தொலைப்படி- (416) 281 1165
மின்னஞ்சல்- athangav@sympatico.ca
சூரியன் இணையம்

[b][size=18]