07-25-2004, 08:36 PM
கருணா தற்போது தனித்துவிடப்பட்ட நிலையில்!
இன்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் தப்பிச் சரணடைந்தவர்களே இறுதியாகக் கருணாவுடன் மிஞ்சியிருந்தவர்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கிழக்கு மாகணத்தில் இராணுவ முகாம்களில் தங்கியிருந்தும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்தும் செயற்படும் தேசவிரோதிகள் ஒரு சிலரே தற்போது எஞ்சியுள்ளனர் என்ற போதும் இவர்கள் அடிநிலைச் செயற்பாட்டாளர்கள் என்பதும், சுயமாக இயங்குதிறன் அற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருணாவின் காலத்தில் நிதிப் பொறுப்பாளராக இருந்த குகநேசன் கருணாவின் நிதிவிவகாரங்களைக் கையாளும் ஒருவராகவும், கருணாவினால் ஏற்படுத்தப்பட்ட வியாபார நிறுவனங்களிற்குபொறுப்பாகச் செயற்பட்டு வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்க்கது. கருணாவின் அதிநம்பிக்கைக்குரியவராக இறுதிவரை இவர் இருந்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கருணாவின் மாயையில் மயங்கி அவருடன் வெளியேறிய முக்கியமானவர்கள், கருணாவிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவுடனான தொடர்பை அறிந்ததும் உடனே விலகிச் சென்று புலிகளிடம் சரணடைந்தனர். குறிப்பாக றொபேட், ஐpம்கெலி, விசு, துரை, சுதா, திருமலை போன்றோர் ஆரம்பத்திலேயே விலகியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் நிலாவினி உட்பட ஏனைய பெண் தளபதிகள் சரணடைந்தனர். இக் காலகட்டத்திலே கருணாவின் பேச்சாளராகவும், கருணாவிற்கான மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்ட வரதனும் கருணாவை விட்டு வெளியேறினார். குறிப்பாக இவர் கருணாவின் வலதுகரம் போலச் செயற்பட்டுவந்தவர். இவர் இப்போது வெளிநாடொன்றில் இருந்தவாறு புலிகளுடன் தொடர்பைப் பேணி வருவதாக இங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கருணாவிடம் எஞ்சிப்போயுள்ள தேசவிரோதச் செயற்பாட்டாளர்களை வழிநடத்துவதற்கான நபர்களிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைப் போக்குவதற்காக சிறைச்சாலையிலிருந்த சச்சு மாஸ்டர் என்பவரை கருணாவின் பேச்சாளராக செயற்படுவதற்கான வசதிகளை சிறீலங்கா புலனாய்வுத்துறை செய்து கொடுத்திருந்தது.
இந்நிலையிலேயே கருணாவுடன் எஞ்சியிருந்த குகநேசன் தலைமையிலான 14 பேர் பபுலப் பகுதியிலிருந்த விகாரை ஒன்றில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இக் கைதின் போது ஆச்சரியப்படத்தக்கவகையில் அதிலிருந்தவர்களின் பெயர் விபரங்களை புலிகள் கொழும்பிலுள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரிக்கு வழங்கி, இவர்களே தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்பதை சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் சட்டத்திற்கு புறம்பாக மேற்படி 14 பேரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு அவர்கள் பற்றிய விபரத்தை சிறீலங்காப் புலனாய்வுத்துறை மறைத்து வந்தது.
இந்நிலையில் இரு வாரங்களிற்கு முன்பு மட்டக்களப்புச் சிறைச்சாலையில் வைத்து சச்சு மாஸ்டரும் இன்னொரு முக்கிய செயற்பாட்டாளரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் கருணா மேலும் பலவீனப்பட்டுப் போயிருந்த நிலையிலேயே இப்போது குகநேசன் உட்பட ஏழு தேசவிரோதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களைச் சுட்டவர்களும் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் கருணா தனித்து விடப்பட்ட நிலையே தோன்றியுள்ளது. எனினும் இவ்வாறான நிலை தோன்றியுள்ளதை மறைக்கும் பொருட்டு சிறீலங்காப் புலனாய்வுத்துறை கிழக்கில் தனிநபர் வன்முறைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறு கடந்த காலங்களைப் போலவே இப்போதும் உண்டு.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>