07-25-2004, 08:32 PM
தாக்குதலை மேற்கொண்டவர்கள் விடுதலைப்புலிகளிடம் சரண்!
இலங்கைத்தீவையே உறைய வைத்திருக்கும் கருணாவின் சகபாடிகள் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரி ஆகியோரின் கொலைகளை அவர்களுடன் கூட இருந்தவர்களே செய்துள்ளனர்.
மேற்படி எண்மரையும் அவர்களுடன் கூட இருந்தவர்களே சுட்டுக் கொலை செய்து விட்டு, இன்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கையில், கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவரையும் இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொலை செய்தவர்கள் தம்மிடம் சரணடைந்திருப்பதாகவும், இவர்கள் நேற்று 24ஆம் திகதி வரை கருணா குழுவினருடன் சேர்ந்து இருந்தாகவும் எனினும் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவர்களை சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பி வந்து சரணடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.
இதேவேளை இக் கொலையானது அவர்களுடன் இருந்த சகபாடிகளாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை சிறிலங்காப் பொலிஸ் அதிகாரியும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>