07-25-2004, 06:46 PM
[b]கருணா கூட்டாளிகள் 7 பேர் சுட்டுக் கொலை
கொழும்பு:
கொழும்வுக்கு அருகே இன்று அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள், கருணாவின் கூட்டாளிகள் 7 பேரையும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரியையும் சுட்டுக் கொன்றனர்.
இதில் சிலர் கருணாவுக்கு மிக நெருக்கமானவர்களாவர். கருணாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இலங்கை ராணுவம் தான் அடைக்கலம் தந்து வருவதாக புலிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதை இலங்கை அரசு மறுத்து வந்த நிலையில், இன்று இத் தாக்குதலை புலிகள் நடத்தினர். இலங்கை உளவுப் பிரிவினரால் மிகப் பாதுகாப்பான இடத்தில் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இவர்களை அடையாளம் கண்டு புலிகள் கொன்றுள்ளனர்.
இந்தத் தாக்குதல் மூலம் கருணா கும்பலுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான தொடர்பையும் புலிகள் வெளிக் கொண்டு வந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்த நார்வே துணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் இன்று கொழும்பு வரும் நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து கொழும்பு கிளம்பும் முன் நிருபர்களிடம் பேசிய ஹெல்ஜெசன்,
இலங்கையில் உடனடியாக மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது மிக, மிக அவசியம். இல்லாவிட்டால் மீண்டும் போர் வெடிக்கும் மிக அபாயகரமான சூழல் நிலவுகிறது என்றார்.
நாளை ஹெல்ஜெசன் கிளிநொச்சிக்குக் சென்று புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கிறார். பின்னர் கொழும்பில் அதிபர் சந்திரிகா, பிரதமர் மகிந்தா ராஜபகஷே ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>