07-25-2004, 03:57 PM
1991ம் ஆண்டுப் பகுதிகளில் நான் சுவிற்சர்லாந்துக்கு அகதியாக வந்திருந்த சமயம் தமிழ் அது இங்குள்ள பெற்றோர்களுக்கு வேப்பங்காயாகவே இருந்தது. எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிப் பெருமைப்பட்ட காலம்.
என் ஆரம்பக்கல்வியோடு தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த எனக்கு தமிழ்மொழியைத் தொடந்து படிக்க ஆவல் ஏற்பட்டது. அச் சமயத்தில் சுவிஸ் பாசல் நகரில் தமிழ் ஆர்வலர்கள் ஒரு சிலரால் தமிழ்ப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. மிகக் குறைந்த மாணவர்களே அப் பாடசாலையில் பயிற்சிபெற்றனர்.ஆனால் இன்றோ நிலைமாறி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப் பாடசாலையில் கல்விகற்கின்றார்கள். அதை விட கல்விச்சேவையின் பாடசாலையில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் என கிட்டத்தட் 3200 ஈழத் தமிழர் வாழும் பாசல் நகரில் 500ற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் தாய்மொழிக் கல்வியினைப் பயில்கின்றார்கள். எனவே எதிர்வரும் காலங்களில் சுவிஸ் பாடசாலைகளில் தமிழ்மொழியும் ஒரு பாடமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. அதன் மாதிரி முயற்சியாக இங்குள்ள ஒரு சுவிஸ் பாடசாலையில் தமிழ்மொழியும் கற்பிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. பாசல் நகரப் பாடசாலைகளில் ஏழுக்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி கற்றால் அங்கே அவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக பாசல் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்படி அந்தந்த நாட்டு அரசுகளே முன் வரும் பட்சத்தில் எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ்மொழி தங்குதடையின்றி எடுத்துக் செல்லப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லையென நினைக்கின்றேன்.