07-15-2003, 10:27 PM
<b>அலை எழுதியது</b>
இப்படிப்பல ஆண்கள் தம்பட்டம் அடிக்காமல் சொல்லாமல் செய்து விட்டார்கள். இன்னும் துணைவியின் சகோதரிகளுக்கும் சீதணம் கொடுத்துள்ளார்கள்..பெண்ணை உயர்த்தவேண்டுமென்பதற்காக ஆணை மலினப்படுத்துகிறீர்களே... வெளிநாட்டு மாப்பிள்ளை, டொக்ரர், இஞ்சினீயர்,மாப்பிள்ளை தேடியது எமது சமூகம்.அதை உள்வாங்கிய பெண்கள் பலர் அத்தகைய மாப்பிள்ளைகளையே வேண்டுமென நின்றதும், சகோதரிகளிருக்க தனது மாப்பிளைக்கு கூட சீதணம் கொடுத்ததால் தனது மாப்பிளை உயர்ந்தவர் என சகோதரிகளிடமே பேசிய பெண்களும் எமது சமூகத்தில் இன்னும் இருக்கின்றனர்.. இதையும் பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
Quote:நான் விலை போக மாட்டேன்.
மாடாய் விலை போக எனக்கு விருப்பமில்லை. மனிதனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கலாமே.
ஆசை - பணத்தாசை
நம்பிக்கையில்லை - உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கையில்லை.
மனைவி கொண்டு வரும் பணத்தை நம்பித்தான் வாழ்க்கையையே ஆரம்பிக்கிறீர்கள்.
இதற்குள் நான் ஆண் என்று தம்பட்டம் வேறு.

-